`நிச்சயமாக அரசியல் களம் காண்போம்!' - அரசியலுக்கு வருவதை உறுதி செய்தார் சகாயம்

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்

``நான் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என  எண்ணினேன். ரஜினியின் முதல்வர் வேட்பாளர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டனர். நான் யாரிடமும் எந்த நடிகரிடமும் பேசியது இல்லை. ஆவிகளை காட்டிலும் ஊழல் செய்யும் பாவிகள் அதிகம் உள்ளனர் என எனக்கு தெரியும்."

  • Share this:
ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம் வாருங்கள் என்ற தலைப்பில் சென்னை ஆதம்பாக்கத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் 1500 க்கும் மேற்பட்ட மக்கள் இயக்கம் தொண்டர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும்  கலந்து கொண்டுள்ளனர். இந்த பொதுக்கூட்டத்தில் பறை இசை முழங்க சகாயத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேசும்போது, ``ஊழல் என்கின்ற புற்றுநோய் அகற்றப்பட வேண்டும். ஆவிகளை காட்டிலும் ஊழல் செய்கிறார்கள். சுடுகாட்டில் படுப்பதற்கு பயம் இல்லை. ஆனால் சுதந்திர இந்தியாவில் நடப்பதற்கு தான் பயமாக உள்ளது. குறைவாக பேசி நிறைய செயல்பட வேண்டும். அதனால் நான் இன்று குறைவாக தான் பேச உள்ளேன். நான் மட்டும் ஊழலை ஒழிப்பது சாத்தியம் இல்லை. எல்லா இளைஞர்களும் ஒன்றாக வாருங்கள் ஊழலை ஒழிக்கலாம். அரசியல் ஆசை ஒரு காலமும் எனக்கு இருந்தது இல்லை. எனக்கு அரசியல் கோபம் இருந்தது உண்டு. ஆனால், அரசியல் ஆசை இல்லை. நான் பதவிக்கு ஆசைப்பட்டது இல்லை. பதவி என்னை ஈர்க்கவில்லை.” என்று பேசினார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்


தொடர்ந்து பேசிய அவர், ``நான் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என  எண்ணினேன். ரஜினியின் முதல்வர் வேட்பாளர் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டனர். நான் யாரிடமும் எந்த நடிகரிடமும் பேசியது இல்லை. ஆவிகளை காட்டிலும் ஊழல் செய்யும் பாவிகள் அதிகம் உள்ளனர் என எனக்கு தெரியும். அரசியல் தாகத்தோடு நான் பேசியது கிடையாது. அங்கே சந்தித்து விட்டார் இங்கே சந்தித்து விட்டார் என சொல்கின்றனர். ஆனால் அந்த நடிகர்களின் வீடுகள் எங்கே உள்ளது என்று கூட எனக்கு தெரியாது.
என்னை வீட்டுக்கு வர வேண்டும் மதுரைக்கு வர வேண்டும் என்பதை போல என்னை பலர் அரசியலுக்கு  அழைக்கின்றனர்.
தேர்தல் களம் என்பது வேறு. பல நிறுவனங்களிடம் நாம் நிதி வாங்க வேண்டி இருக்கும் அது நமது நேர்மைக்கு பாதகம் விளைவிக்கும்.
இரத்த துடிப்பு உள்ள இளைஞர்களே வாருங்கள் புதிய தமிழகத்தை படைக்கலாம்.” என்றார்.

முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்


மேலும், ``அரசியல் களம் காண்போம் என்பதை ஆமோதிக்கிறேன். அரசியல் களம் அவ்வளவு எளிதானது அல்ல. ஊழலுக்கு எதிராக லட்சியத்துடன் தொடர்ந்து போராடுவோம். என்னுடைய கோரிக்கை
நீங்கள் அரசியல் களத்தில் பயணிக்கும் கடைசி வரை காமராஜர், கக்கன் போல முழு எளிமையானவராக நேர்மையாளராக இருக்க வேண்டும். இறுதிவரை நீங்கள் நேரமையாளராக இருந்தால் எனக்கு சில கோரிக்கைகள் உள்ளது. உங்களோடு பயணிக்க நான் ஆசைப்படுகிறேன். ஊழல் நிர்வாகம் வலிமை பெற்றுள்ளது. ஊழல்வாதிகள் வலிமை பெற்றுள்ளனர். லட்சியம் தான் முக்கியம் அதனால் அதிகம் என்னை துதி பாட வேண்டாம். நிச்சயமாக அரசியல் களம் காண்போம். சாதி மதம் உடைத்து நேர்மையாக உழைப்போம்.” என்றும் பேசியுள்ளார்.
Published by:Ram Sankar
First published: