எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்போம் - பாஜக மாநில துணைதலைவர் அண்ணாமலை

எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்போம் - பாஜக மாநில துணைதலைவர் அண்ணாமலை

அண்ணாமலை

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி தேர்தலைச் சந்திப்போம் என பா.ஜ.க மாநில துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மயிலாடுதுறையில் பா.ஜ.க நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள வந்த பா.ஜ.க மாநிலத் துணைதலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

    செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ’புதுச்சேரி மாநிலத்தில் நியமன எம்.எல்.ஏ-க்கள் ஓட்டுப்போட தகுதி உள்ளது. அதற்கு சட்டத்தில் வழிவகை உள்ளது. தொடர்ச்சியாக புதுச்சேரியில் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள். நியமன எம்எல்ஏக்கள் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்கள். என்னை பொருத்தவரை நியமன எம்எல்ஏக்கள் ஓட்டுப்போட தகுதி உடையவர்கள். தர்மேந்திர பிரதான் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரி விதிப்பில் கொண்டுவர வேண்டும் என்று கூறியுள்ளார். வருமான இழப்பு வரும் என்பதால் மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், ’சர்வதேச அளவில் உள்ள பெட்ரோல், டீசல் விலையை கொண்டு விலை நிர்ணயம் செய்து வருகிறோம். மக்கள் அச்சப்பட தேவையில்லை. பெட்ரோல், டீசல் விலை கட்டுப்படுத்தப்படும். தேசிய ஜனநாயகக் கட்சியின் மிகப் பெரிய கட்சி அதிமுக. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தி தேர்தல் களத்தை சந்திப்போம். பாஜக வலுவான நிலையில் உள்ளது. சேலத்தில் மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது. விழுப்புரத்தில் அமித்ஷா பங்கேற்கும் மாநாடு நடைபெற உள்ளது. பெண்கள் பாஜகவின் பக்கம் சாய்ந்து உள்ளனர். சசிகலாவை அதிமுகவில் இணைக்க நாங்கள் முயற்சி செய்யவில்லை. சசிகலா அதிமுகவில் சேருவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

    மேலும், ``ஐபேக் அளித்த தேர்தல் யுக்தியாக ஸ்டாலினின் புதுமையான பிரச்சாரங்களால் மக்களின் மனதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. விடியல் தரப்போகிறார் என்று கூறும் மு.க.ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். ஐபேக் திமுகவை இயக்குகிறது என்று கூறப்படும் கிம்மிக்ஸ் என்ற புதுமையான யுத்திகளை கையாள்வதால் மக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நல்ல வேட்பாளர்களை எதிர்பார்க்கிறார்கள். அராஜகமற்ற கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த தகுதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் யுக்திகளை பிரசாந்த கிஷோரின் ஐபேக் டீம் வழங்கியதால் அக்கட்சியில் இருந்து எம்.பி, எம்.எல்.ஏக்கள் வெளிவந்தனர். தமிழகத்திலும் திமுகவுக்கு ஐபேக் தலைவராக இருந்து திமுகவை ஆட்டுவிக்கிறது. அதிமுகவில் உள்ள சுனில் வழிகாட்டுகிறார் தடையாக இருக்கவில்லை என்றார். நாயின் தலையை வால் ஆட்டுகிறதாக அல்லது நாயின் வால் தலையை ஆட்டுகிறதா என்ற கேள்வி எழுகிறது. என்னைப் பொருத்தவரை ஐபேக் நிறுவனம் தான் திமுகவை இயக்குகிறது என்று தெரிவித்தார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ram Sankar
    First published: