பாஜகவில் இணைய மு.க.அழகிரிக்கு அழைப்பு

மு.க.அழகிரி, திமுகவுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சியில் இணைய மாட்டார் என்று அரசியல் நோக்கர்களும், பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர்.

பாஜகவில் இணைய மு.க.அழகிரிக்கு அழைப்பு
மு.க.அழகிரி
  • Share this:
பாஜகவில் இணைய மு.க.அழகிரிக்கு அழைப்பு விடுப்பேன் என அக்கட்சியில் புதிதாக இணைந்த கே.பி ராமலிங்கம் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில், அழகிரி பாஜகவில் இணையும் முடிவை அவ்வளவு எளிதில் எடுக்க மாட்டார் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர்.

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பியும், மு.க அழகிரியின் தீவிர ஆதரவாளருமான கே.பி ராமலிங்கம், சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி ரவி முன்னிலையில் அக்கட்சில் இணைந்தார்.

திமுக தலைவராக இருந்த கருணாநிதி மறைவுக்கு பிறகு அக்கட்சியின் தலைமையை ஏற்கும் மனப்பக்குவம் தனக்கு இல்லாததால், பாஜகவில் இணைவதாகவும், புதிதாக அரசியல் பயணத்தை தொடங்கியிருப்பதாகவும் கே.பி ராமலிங்கம் தெரிவித்தார்.


இதைத்தொடர்ந்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்த அவர், தாம் பாஜகவில் இணைவதற்கு மு.க. அழகிரி வாழ்த்தியதாகக் கூறினார். மேலும், மு.க. அழகிரி புதிதாக கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதாகவும், அவரை பாஜகவில் இணைய அழைப்பு விடுப்பேன் என்றும் கூறினார்.

அதேநேரம், மு.க.அழகிரி, திமுகவுக்கு மாற்றாக வேறு ஒரு கட்சியில் இணைய மாட்டார் என்று அரசியல் நோக்கர்களும், பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர். அழகிரி பாஜகவில் இணையும்பட்சத்தில், திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளவர்கள் பாஜகவிற்கு செல்ல வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தீவிர களப்பணியாற்றி வரும் சூழலில், வி.பி துரைசாமி, குஷ்பு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலையை தொடர்ந்து கே.பி ராமலிங்கமும் பாஜகவில் இணைந்திருப்பது அக்கட்சிக்கு கூடுதல் உத்வேகத்தை அளித்துள்ளது.நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்
First published: November 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading