சட்டமன்ற தேர்தலில் இந்த 11 ஆவணங்களை காண்பித்தும் வாக்கு அளிக்கலாம்

மாதிரி படம்

புகைப்பட அடையாள அட்டையை காண்பிக்க முடியாதவர்கள் ஆதார் அட்டை, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை உள்ளிட்டவற்றை காண்பிக்கலாம்.

 • Share this:
  தேர்தலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க முடியாதவர்கள், புகைப்படங்களுடன் கூடிய 11 வகையான அடையாள ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'வாக்காளர் அடையாள அட்டையைப் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும், வாக்குச்சாவடியில் வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

  புகைப்பட அடையாள அட்டையை காண்பிக்க முடியாதவர்கள் ஆதார் அட்டை, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பணி அட்டை,புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை,ஓட்டுநர் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை,தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ், தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு,புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணி அடையாள அட்டைகள்,நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக அடையாள அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.புகைப்பட வாக்காளர் சீட்டிற்குப் பதிலாக வாக்காளர் தகவல் சீட்டு வழங்கப்படும் என்றும், இதனை வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக பயன்படுத்த முடியாது என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
  Published by:Ramprasath H
  First published: