திமுக மாநாட்டில் ஓவைசி அழைப்பு ஒரு விஷப்பரீட்சை - இந்திய தேசிய லீக் கட்சி கண்டனம்

திமுக மாநாட்டில் ஓவைசி அழைப்பு ஒரு விஷப்பரீட்சை - இந்திய தேசிய லீக் கட்சி கண்டனம்

அசாதுதீன் ஓவைசி

இது போன்ற விஷப் பரீட்சையில் திமுக இறங்கும் நேரத்தில் அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பதில் திமுக தேர்தலுக்கு பிறகு உணரும்

  • Share this:
வரும் 6ம் தேதி திமுக மாநாட்டில் அசத்தீன் ஓவைசியை அழைத்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என இந்திய தேசிய லீக் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளை மிரட்டவே AIMIM அசத்தீன் ஓவைசியை மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக நாம் கருதுகிறோம் .

திமுகவின் இதுபோன்ற தவறான செயல்பாடுகளால் தமிழ் நாட்டில் திமுகவுக்கு கிடைக்க கூடிய முஸ்லீம் வாக்குகளை முழுவதும் இழக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் நாட்டில் முஸ்லீம் அரசியல் கட்சிகளின் கட்டமைப்புக்கு முன் அசத்தீன் ஒய்வோசி கட்சி பூஜ்யம் என்பது திமுக உணராதது ஏன் ?

நடந்து முடிந்த பீகார் தேர்தலில் அசத்தீன் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றது விபத்தாக அரசியல் நோக்கர்களின் கருத்து தேர்தலுக்கு முன்னர் சில எம்எல்ஏகள் AIMIM கட்சியில் இணைந்தது எல்லாம் திமுகவின் கவனத்திற்கு வரவில்லையா ?

திமுக கூட்டணியில் உள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகளை பயமுறுத்தி குறைந்த தொகுகளை ஒதுக்க திமுக அசத்தீன் ஒய்வோசியை பயன்படுத்துவதாக தோன்றுகிறது ..

இது போன்ற விஷப் பரீட்சையில் திமுக இறங்கும் நேரத்தில் அதன் விளைவு மோசமாக இருக்கும் என்பதில் திமுக தேர்தலுக்கு பிறகு உணரும் .

திமுக சமுதாய அமைப்புகளை கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம்“ என தெரிவித்துள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vijay R
First published: