தமிழகத்திலேயே சென்னையின் வில்லிவாக்கம் தொகுதியில் தான் குறைந்தபட்ச வாக்குப்பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என்றும் குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 55.12 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிக்கு நிறைவுபெற்றது. வாக்குப்பதிவு முடிந்த உடன்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.  சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த நிலவரம் தற்போதைய நிலவரம் என்றும் இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  தமிழக சட்டமன்ற தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் குறைந்தபட்சமாக சென்னையில் 59.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. குறிப்பாக சென்னையில் வில்லிவாக்கம் தொகுதியில் தான் 55.52 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மாநிலத்திலேயே அதிகபட்சமாக பாலக்கோட்டில் 87.33 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

  சென்னைக்கு அடுத்தப்படியாக குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 65 சதவீத வாக்குகளும், செங்கல்பட்டில் 68.18 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: