West Bengal Assembly Election 2021 | இந்திய முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் நான்கு பாகிஸ்தான்களை உருவாக்கலாம்: திரிணாமூல் தலைவர் பேச்சுக்கு பாஜக கொந்தளிப்பு

West Bengal Assembly Election 2021 | இந்திய முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் நான்கு பாகிஸ்தான்களை உருவாக்கலாம்: திரிணாமூல் தலைவர் பேச்சுக்கு பாஜக கொந்தளிப்பு

திரிணாமூல் கட்சியின் ஷேக் ஆலம் சர்ச்சைப் பேச்சு.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை சனிக்கிழமை தொடங்கும் நிலையில் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் திரிணாமூல் தலைவர் ஷேக் ஆலம் என்பவர் 30% முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்தால் 4 பாகிஸ்தான்களை உருவாக்கி விடலாம் என்று பேசியதற்கு பாஜக கொந்தளித்துள்ளது.

  • Share this:

    பிதன் சந்திர மஜ்ஹி என்பவருக்கு பிரச்சாரம் செய்த திரிணாமூல் தலைவர் ஷேக் ஆலம், “நாங்கள் சிறுபான்மையினர் 30%. மற்றவர்கள் 70%. பாஜக நினைக்கிறார்கள் இந்த70% மெஜாரிட்டி வாக்குகள் மூலம் ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று பாஜக கனவு காண்கின்றனர். இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். இந்திய முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் 4 பாகிஸ்தான்களை உருவாக்கலாம். 70% மீதிப்பேர் எங்கு போவார்கள்?” என்று பேசியுள்ளார்.

    2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் உள்ள 14.2% முஸ்லிம்களில் 27% முஸ்லிம்கள் பெங்காலில் மட்டும் உள்ளனர்.

    இந்நிலையில் இவரது பேச்சு நாட்டைத்துண்டாடும் முயற்சி என்று பாஜக சாடியுள்ளது, அக்கட்சியின் அமித் மால்வியா, “இந்திய முஸ்லிம்கள் ஒன்றுபட்டால் 4 பாகிஸ்தான்களை உருவாக்கலாம் என்று டிஎம்சி கட்சியைச் சேர்ந்த தலைவரே கூறுகிறார், கட்சித் தலைவர் மம்த பான்ர்ஜி இதனை ஆதரிக்கிறாரா? இது போன்ற பெங்கால் நமக்கு வேண்டுமா?” என்று கேட்டுள்ளார்.

    மேலும் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “மம்தா பானர்ஜியின் சிறுபான்மையினரை திருப்தி செய்யும் அரசியலினால் இன்று டிஎம்சியின் ஷேக் ஆலம் பேச தைரியம் கிடைத்துள்ளது என்றால் பெரும்பான்மையினரை மம்தா ஆட்சி 2ம் தர குடிமக்களாக்கியுள்ளது என்றுதான் பொருள். துர்கையம்மன் விழாவுக்குக் கூட இந்துக்கள் கோர்ட் உத்தரவை நாட வேண்டியிருக்கிறது” என்றார்.

    மேற்கு வங்கத்தில் இந்துத்துவ அரசியலை வெளிப்படையாகக் கையில் எடுத்த பாஜக, தொடர்ந்து மம்தாவை இந்தக் கோணத்தில் தாக்கிப் பேசிவருவது வழக்கமாகியுள்ளது.

    மம்தாவும் தானும் ஒரு பிராமணப்பெண் தான், ஒரு பிராமினுக்கு இந்து மதம் பற்றி பாஜக சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவையில்லை என்றும் ஆவேசமாகப் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

    294 சட்டமன்ற தொகுதிகளுக்கான மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் 8 கட்டங்களாக நடக்கின்றன. முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் காரசார பிரச்சாரத்தில் ஈடுபட்டு வர, மேற்கு வங்கமே கர்ஜனைகளின் கூக்குரல்களின் காட்சி சாலையாகி உள்ளது.
    Published by:Muthukumar
    First published: