சின்னம் வாங்க வந்தேன்.. நிச்சயமா போட்டியிடுறேன் - மன்சூர் அலிகான் அதிரடி

சின்னம் வாங்க வந்தேன்.. நிச்சயமா போட்டியிடுறேன் - மன்சூர் அலிகான் அதிரடி

மன்சூர் அலிகான்

மன வேதனையுடன் இருக்கிறேன். எங்கே சென்றாலும் 'பாய், எவ்வளவு பணம் வாங்கிவிட்டீர்கள்?' என்று தொடர்ச்சியாகக் கேட்கிறார்கள்.

  • Share this:
    தேர்தலில் மிகப் பெரிய சவால் இருந்தாலும், துணிச்சலுடன் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன் என கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் களமிறங்கினார் நடிகர் மன்சூர் அலிகான். மார்ச் 18-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்கள் கூடும் இடங்களில் கையில் பேனா, பேப்பருடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

    கடைக்காரர்களிடம் ‘நான் உங்க தொகுதியில போட்டியிடுறேன் என்ன பிரச்னைன்னு சொல்லுங்க’ என மக்களுடன் மிக எளிமையான உரையாடலை மேற்கொண்டார். மைதானங்கள், பூங்காக்களுக்கு சென்று அங்கு உடற்பயிற்சி செய்தும், இளைஞர்களுடன் விளையாடியும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சாலையில் படுத்திருந்த ஒரு நாயை கொஞ்சினார். அந்த இடத்தில் இருந்த குப்பையை சுட்டிக்காட்டி இதையெல்லாம் யாரும் க்ளீன் பண்ண மாட்டாங்களா எனப் பொதுமக்களிடம் வினவினார்.

    செல்லமாக நாயை மிரட்டிய மன்சூர் இந்த குப்பையை எல்லாம் நீதான் இங்க கொண்டு வந்து போட்டீயா.. நல்லா அதுமேல மெத்து மெத்துன்னு படுத்து இருக்கியா என அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த இடத்தில் இருந்த குப்பைகளை அனைத்தும் அடுத்தநாள் அகற்றப்பட்டது வேறுகதை. இந்நிலையில் நேற்று மன்சூர் பேசும் ஆடியோ ஒன்று வெளியானது தேர்தலில் போட்டியிடவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டது.

    மன்சூர் அலிகான்


    இதனையடுத்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான். இந்தத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளேன். மன வேதனையுடன் இருக்கிறேன். எங்கே சென்றாலும் 'பாய், எவ்வளவு பணம் வாங்கிவிட்டீர்கள்?' என்று தொடர்ச்சியாகக் கேட்கிறார்கள். 'பாய் ஓட்டைப் பிரிப்பதற்காகத்தானே தேர்தலில் நிற்கிறீர்கள்?' என மக்கள் கேட்பது மனவேதனையாக இருக்கிறது. கெட்ட பெயருடன் நாம் இருக்கக் கூடாது. ஒன்றுமே புரியவில்லை. இந்தத் தேர்தலே நமக்கு வேண்டாம்ன்னு சென்னைக்கு கிளம்பிட்டேன்’ என்றார்.

    இந்நிலையில் இன்று பேரூர் வட்டாச்சியர் அலுவலகத்துக்கு மன்சூர் அலிகான் வந்திருந்தார். அப்போது பேசியவர், “ சின்னம் வாங்க வந்ததாகவும் , நான் நிச்சயமாக போட்டியிடுவேன் என்றார்.தொண்டாமுத்தூர் தொகுதியில் வாடகைக்கு வீடு கிடைக்காத அளவுக்கு நெருக்கடிகள் கொடுக்கிறார்கள்.
    மேலும் பிரச்சார வாகனத்துக்கு அனுமதிக்கு கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். விரைவாக அனுமதி வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கை வைத்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: