நான் சசிகலாவின் ஆதரவாளர் தான் ஆனால் அரசியல் வேறு, விசுவாசும் வேறு என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-விற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக முதல்வர் பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களை கருணாஸ் சந்தித்தார்.
அப்போது, “உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-வுக்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு அளிக்கிறது. பிரச்சாரமும் செய்ய உள்ளேன். நாங்கள் போட்டியிடவும் விரும்புகிறோம். அதை முதல்வரிடம் தெரிவித்துள்ளேன்.
குடிமராத்து பணிகளை அதிமுக அரசு சிறப்பாக செய்துள்ளது. என்னுடைய தொகுதியில் அதன் பயன் கிடைத்துள்ளது. மக்கள் ஆதரவு அதிமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
நான் சசிகலா ஆதரவாளர் தான். அவர் வந்த பிறகு மற்ற நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும். முக்குலத்தோர் புலிப்படை எதிர் காலத்திற்காக அதிமுக-வுக்கு ஆதரவு அளிதுள்ளோம்“ என்றார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.