நான் ரஜினியுடன் தொடர்ந்து இருப்பேன் - அர்ஜூன மூர்த்தி விருப்பம்

Youtube Video

ருத்துவர்களின் ஆலோசனை அடிப்படையிலேயே கட்சி தொடங்குவதில்லை என்ற முடிவை ரஜினிகாந்த் எடுத்துள்ளதார் - அர்ஜூன மூர்த்தி

 • Share this:
  தற்போதும் ரஜினிகாந்துடன் இருக்கவே விரும்புவதாக அவர் தொடங்கவிருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

  நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்திருந்தார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கொரோனா காரணமாக அவர் கட்சி அறிவிப்பு தாமதமாகி கொண்டே வந்தது. இதனிடையே எப்போது கட்சி தொடங்குவது என்பது குறித்து தொடர்ந்து தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ரஜனிகாந்த் ஆலோசனை நடத்தி வந்தார்.

  இந்நிலையில், ஜனவரி மாதம் கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் ட்விட்டரில் அறிவித்திருந்தார். மேலும் . மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம். இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல என்றும் கூறியிருந்தார்.

  இதற்கு பின் போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தியை தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து கட்சி ஆரம்பிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சிகிச்சையில் ரஜினி உடல்நிலை சீரானது, ஆனால் ஓய்வில் இருப்பதே உங்களுக்கு நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

  மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜாகி சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகட்சி அரசியல் கட்சி தொடங்கவில்லை என்று அறிவித்தார். மேலும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், தனது ரசிகர்களுக்கும் அரசியல் கட்சி முடிவிலிருந்து பின்வாங்கியதால் வருத்தம் தெரிவித்தார்.

  இந்நிலையில் சென்னையில் உள்ள இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன மூர்த்தி, தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் ரஜினிகாந்த் இருப்பதாக தெரிவித்தார். மருத்துவர்களின் ஆலோசனை அடிப்படையிலேயே கட்சி தொடங்குவதில்லை என்ற முடிவை ரஜினிகாந்த் எடுத்துள்ளதாகவும், இதற்கு அனைவரும் மதிப்பளித்து தேவையான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். பிரதமர் நரேந்திர மோடியும், ரஜினிகாந்தும் தனக்கு இரண்டு கண்கள் என்று அர்ஜுன மூர்த்தி குறிப்பிட்டார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: