எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன், முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன் - ஆ.ராசா

எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன், முதல்வர் காயப்பட்டால் மன்னிப்பு கோருகிறேன் - ஆ.ராசா

ஆ.ராசா

தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் பழனிசாமி குறித்து ஆ.ராசா பேசிய கருத்து சர்ச்சையாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 • Share this:
  தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது முதல்வர் மற்றும் அவரது தாயாரை இழிவாக பேசியதாக ஆ.ராசா மீது அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். பெண்கள் குறித்து திண்டுக்கல் லியோனி, ஆ.ராசா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொடர்ந்து இழிவாக பேசி வருவதாக குற்றம்சாட்டியிருந்தனர்.

  இந்த விவகாரம் தொடர்பாக விளக்கமிளத்த ஆ.ராசா, எனது கருத்து வெட்டப்பட்டு தவறாக திரித்து காட்டப்பட்டுள்ளது என்றார். மேலும் திமுக தலைவர் ஸ்டாலினும் கட்சியினர் பேச்சில் கண்ணியம் இருக்க வேண்டும் அதனை மீறக் கூடாது என்று தெரிவித்திருந்தார்.

  இந்நிலையில் நீலகிரியில் செய்தியாளர்களை சந்தித்த ஆ.ராசா, ஸ்டாலின் அரசியல் ஆளுமை மற்றும் எடப்பாடி அரசியல் ஆளுமை பற்றி தான் பேசி அதற்கு விளக்கம் கொடுத்தேன். எனது பேச்சுக்கு மனம் வருந்துகிறேன். முதல்வர் காயப்ட்டால் மன்னிப்பு கோருகிறேன். என்னால் முதல்வர் கண் கலங்கினார் என்பது எனது வாழ்வில் கரும்புள்ளியாக இருந்து விடக்கூடாது. எனது பேச்சு தனி மனித விமர்சனம் இல்லை, பொது வாழ்வில் உள்ள தலைவர் பற்றிய ஒப்பீடு என்றுள்ளார்.
  Published by:Vijay R
  First published: