தேர்தலில் சீட் கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எனக்கில்லை - குஷ்பு

தேர்தலில் சீட் கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எனக்கில்லை - குஷ்பு

குஷ்பு

2011-ல் இருந்து நான் பார்க்கும் 5-வது தேர்தல் இது. ஒவ்வொரு தேர்தலின் போதும் குஷ்பு இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என பேசுவார்கள். குஷ்புக்கு இந்த தொகுதி தரவில்லை என்பதால் அவர் வருத்தத்தில் இருக்கிறார் என அவர்களே முடிவு செய்துகொள்வார்கள்.

 • Share this:
  தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.கவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதி பா.ஜ.க பொறுப்பாளராக குஷ்பு நியமிக்கப்பட்டிருந்தார். இதன்காரணமாக குஷ்பு இந்த தொகுதியில் போட்டியிடுவார் என்று பேச்சு எழுந்தது. அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க சேப்பாக்கம் தொகுதியை கேட்டுப்பெறும் என்றும் பேசப்பட்டது. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ம.க-வுக்கு திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் குஷ்பு அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது.

  இதுகுறித்து பேசிய குஷ்பு, “ எனக்கு சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் பொறுப்பாளராக பணி ஒதுக்கப்பட்டது. கட்சி சார்பாக இந்த தொகுதியில் வேலை செய்து வந்தேன். கட்சியை பலப்படுத்துவதற்காக உழைத்தேன். நீங்கள்தான் சேப்பாக்கம் தொகுதியில் நிற்க போகிறீர்கள் அதனால் பணியாற்றுங்கள் என யாரும் என்னிடம் கூறவில்லை. நானும் அதுபோன்ற எண்ணத்தில் இங்கு வந்து பணியாற்றவில்லை. கட்சிக்காக உழைத்தேன் அவ்வளவுதான்.

  2011-ல் இருந்து நான் பார்க்கும் 5-வது தேர்தல் இது. ஒவ்வொரு தேர்தலின் போதும் குஷ்பு இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என பேசுவார்கள். குஷ்புக்கு இந்த தொகுதி தரவில்லை என்பதால் அவர் வருத்தத்தில் இருக்கிறார் என அவர்களே முடிவு செய்துகொள்வார்கள். நான் எங்கும் எனக்கு தொகுதி ஒதுக்கப்படும் என்ற எதிர்ப்பார்புடன் இருந்தது கிடையாது. எதிர்பார்ப்பு இருக்கும்போது தான் ஏமாற்றம் இருக்கும். எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எனக்கில்லை. நான் கட்சியை நம்பி வந்துள்ளேன். எனக்கு பொறுப்பு கொடுக்கப்படும் தொகுதியை அளிப்பார்கள் என்றுநான் வரவில்லை” எனத் தெரிவித்தார்.
  Published by:Ramprasath H
  First published: