உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படத்தில் நடித்திருந்தாலும் நான் நேர்மையானவன் - கமல்ஹாசன்

உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படத்தில் நடித்திருந்தாலும் நான் நேர்மையானவன் - கமல்ஹாசன்

கமல்ஹாசன்

உதயநிதி ஸ்டாலின் தயாரித்த படத்தில் நடித்திருந்தாலும் நான் நேர்மையானவன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் மநீம தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதிக்கான உறுதிமொழிகளை அளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்,  எல்லா தொகுதிகளிலும் இப்படிப்பட்ட திட்டங்களை எங்களது வேட்பாளர்கள் வெளியிடுவார்கள். இது வெறும் பேச்சாக இல்லாமல் செயலாக மாற வேண்டும். வேறு தொகுதிகளில் இருந்தாலும், எனது தொகுதி மக்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். குப்பைக்கிடங்குகள் உள்ள கம்பவுண்டிற்குள் பள்ளிக்கூடங்கள் நடைபெறுகிறது

  நடிகர், வெளியூர்காரர் என்ற பிராச்சாரத்தை ஏற்கனவே ஆண்டிபட்டியில் எம்.ஜி.ஆர். முறியடித்துள்ளார். யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற கணியன் பூங்கன்றனின் உணர்வு, எல்லா நல்ல தமிழர்களுக்கும் உண்டு. என்னை கோவை மக்கள் அவர்களில் ஒருவனாக நினைத்து ரொம்ப நாளாயிற்று. சிலர் தூங்க வேண்டும் என்பதற்காக என்னை வெளியூர்காரர் என்கின்றனர்.

  மத்திய அரசின் வேட்பாளர் என்பதால் மத்திய அரசின் திட்டங்களை கொண்டு வர முடியுமென்ற பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கருத்து குறித்த கேள்விக்கு, மத்திய அரசுடன் தொடர்புடையவர்கள் தான் செய்ய முடியுமென்றால் கூட்டாட்சி இந்தியா இல்லை. ஒரு ஏழை எம்எல்ஏவிற்கும் அதே பலம் உண்டு. அதை நிராகரிக்கும் பிரதமர் நல்ல பிரதமர் இல்லை என பதிலளித்தார்

  நடிகர் ராதாரவி விமர்சனம் குறித்த கேள்விக்கு, அவர் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார். ராதாரவியின் குறைந்தபட்ச வேலையை கூட அமைச்சர்கள் செய்வதில்லை. ராதாரவியின் குற்றச்சாட்டுகள் முக்கியமில்லை. எங்களது கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகள் புதிதல்ல.

  மேலும் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசிய கமல்ஹாசன்  உதயநிதி தயாரித்த படத்தில் நடித்திருந்தாலும் நான் நேர்மையானவன். அவர் நேர்மையை பற்றி எனக்கு தெரியாது என்றார்.  உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் 2010-ம் ஆண்டு கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் மன்மதன் அம்பு திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.
  Published by:Vijay R
  First published: