‘நான் உன்னை இங்க அடிச்சேன்னா உன் உடம்ப சுடுகாட்டுலதான் கண்டுபிடிக்கணும்’- சினிமா வசனம் பேசி அரசியல் மேடையில் மிதுன் கலகல

‘நான் உன்னை இங்க அடிச்சேன்னா உன் உடம்ப சுடுகாட்டுலதான் கண்டுபிடிக்கணும்’- சினிமா வசனம் பேசி அரசியல் மேடையில் மிதுன் கலகல

மிதுன் சக்கரவர்த்தி

மிதுன் சக்கரவர்த்தி கொல்கத்தாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரிகேட் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட அரங்கிற்கு வந்து பாஜக தலைவர்கள் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டு பிறகு உரையாற்றினார்.

 • Share this:
  மிதுன் சக்கரவர்த்தி கொல்கத்தாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் பிரிகேட் மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட அரங்கிற்கு வந்து பாஜக தலைவர்கள் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டு பிறகு உரையாற்றினார்.

  அப்போது அவர் புதிய கோஷம் ஒன்றை உருவாகினார், ‘நான் ஒரு நல்ல பாம்பு ஒரு கடி போதும்’ என்று பேசியது சமூக ஊடகங்களில் வைரலாகியது. இவர் இவ்வாறு பேசியவுடன் பெரிய அளவிலான கூட்டத்தின ஆரவாரம் செய்து கூக்குரல் எழுப்பினர்.

  நான் ஒரு பெங்காலி, இந்த மண்ணில் வளர்ந்தவர்கள் அனைவருக்கும் இதன் மீது உரிமை உள்ளது. நான் மேற்குவங்கத்தில் உள்ள ஒவ்வொருவரின் உரிமைக்காகவும் அவர்களுடன் துணை நிற்பேன்.

  வடக்கு கொல்கத்தாவின் மிகச்சிறிய பகுதியான ஜோராபகனில் இருந்து வந்தவன், நான் பெரிய ஆளாக வேண்டும் என்று கனவு கண்டேன், ஆனால் பிரதமர் நரேந்திர மோடி உட்பட நாட்டின் மிகப்பெரிய அரசியல் தலைவர்களுடன் ஒரு மேடையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை’ என்று பேசினார்.

  ஆனால் கூட்டத்தினர் எழுச்சிப் பெற்றது எப்போது எனில் அவர் நடித்த 'MLA Fatakeshto' - படத்தின் வசனத்தைப் பேசிய போது கூட்டத்தினர் எழுச்சி ஆரவாரம் செய்தனர், “நான் உன்ன இங்க அடிச்சா உன் உடம்ப சுடுகாட்டுலதான் கண்டுப்பிடிக்கணும்.”

  நான் நல்லபாம்பு ஒரு கடி போதும் நீங்கள் காலி இப்போது புதிய கோஷத்தைக் கேளுங்கள், விஷமில்லாத பாம்பு என்று என்னை நினைத்து விடாதீர்கள், நான் நல்லபாம்பு ஒரே கடியில் நீங்கள் காலியாகி விடுவீர்கள்.

  இவ்வாறு பேசினார் மிதுன் சக்ரவர்த்தி. மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, 1980களில் பாலிவுட்டை கலக்கிய இவர் 3 முறை தேசிய விருது பெற்றுள்ளார். மிதுன் சக்கரவர்த்தி கதாநாயகனாக நடித்து 1989-ம் 19 படங்கள் வெளிவந்தன. இதன் மூலம் அவர் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

  இன்றளவும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. ஹிந்தி, பெங்காலி, தமிழ், தெலுங்கு, ஒரியா, பஞ்சாபி, போஜ்பூரி, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1982 ம் ஆண்டு வெளிவந்த டிஸ்கோ டான்சர் படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர். இந்த படத்தின் இடம்பெற்ற im a disco dance என்ற பாடல் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானது.
  Published by:Muthukumar
  First published: