திமுக  கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம்?

ராகுல் காந்தி - மு.க.ஸ்டாலின்

காங்கிரஸ் குழு புதன்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளனர் .

  • Share this:
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பிரதான கூட்டணி கட்சியாக உள்ளது. காங்கிரஸ் கட்சி தமிழக மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் , தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர் ராமசாமி ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசி உள்ளனர்.

இந்நிலையில் நாளை மறுதினம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த பேச்சுவார்த்தைக்கு காங்கிரஸ் மேலிடம்  கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சிங் சுர்ஜிவாளா இருவரையும் நியமிக்க உள்ளது. இவர்கள் இருவருடன் காங்கிரஸ் தமிழக  மேலிட பொறுப்பாளர்  தினேஷ் குண்டுராவ், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி,  சட்டமன்ற குழு தலைவர் கே.ஆர் ராமசாமி ஆகியோர் அடங்கிய குழு புதன்கிழமை மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளனர் .

இந்த சந்திப்பின் போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்பது முடிவு செய்யபடும் என எதிர்பார்க்கபடுகிறது. முன்னதாக உம்மன் சாண்டி, தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்ட தலைவர்கள்  தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் சத்திய மூர்த்திபவனில் ஆலோசனை நடத்துகின்றனர்.

 
Published by:Vijay R
First published: