அசாமில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சத்திரங்கள்.. பின்னணி என்ன?

அசாமில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சத்திரங்கள்.. பின்னணி என்ன?

சத்திரங்கள்

அஸ்ஸாம் மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சத்திரங்கள் அரசியல் வெற்றியை தீர்மானிப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

  • Share this:
வருகிற மார்ச் 27ம் தேதி முதல் கட்ட தேர்தலை சந்திக்க இருக்கும் அசாம் மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எதிர்வரும் 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி ஆளும் மாநிலாக இருப்பது அசாம் மட்டுமே. எனவே மீண்டும் அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக முனைப்புக்கட்டி வருகிறது. மேலும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கூட்டணி தீவிரம் காட்டி வருகின்றன. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் பிரச்சாரங்கள் வேறுபட்டதாக இருந்தாலும், இரு தரப்பினரின் பிரச்சார பாதைகளிலும் ஒரு இடம் மட்டும் முக்கியமான பங்கு வகிக்கிறது. அது தான் புகழ்பெற்ற வைணவ புனித-சீர்திருத்தவாதி ஸ்ரீமந்தா சங்கர்தேவாவின் பிறப்பிடமான நாகானில் உள்ள பார்தத்ரவாதான் அல்லது சத்திரம் என்கிற மடாலயம் (Bartadrava Than/Sattra).

கடந்த மாதம், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மடாலயத்தில் ஒரு அழகுபடுத்தும் திட்டத்தை தொடங்கினார். மேலும் அதன் வளர்ச்சி பணிக்காக ரூ.188 கோடி ஒதுக்கியுள்ளார். அதற்கு சில வாரங்களுக்கு முன்னதாக, காங்கிரஸ் கட்சி அதன் அசாம் பசான் அஹோக் (Come Lets Save Assam) பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஒரு பஸ் யாத்திரையை, அதே மடாலயத்தில் இருந்து தொடங்கியது.

அஸ்ஸாமில் உள்ள அரசியல்வாதிகள் பெரும்பாலும் வெவ்வேறு சத்திரங்களுக்குச் சென்று ஆசீர்வாதங்களைத் தேடுவதையோ அல்லது சங்கர்தேவாவின் நற்பண்புகளை புகழ்வதையோ பார்ப்பது பொதுவானது. அதிலும் குறிப்பாக தேர்தல்களுக்கு முன்னதாக அங்கு செல்வது வழக்கம். கடந்த வாரம் கூட, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தனது அசாம் பயணத்தின் ஒரு பகுதியாக லக்கிம்பூரில் சங்கர்தேவாவின் மிகவும் நம்பகமான சீடரான ஸ்ரீமந்த மாதவதேவின் பிறப்பிடம் என்று சொல்லக்கூடிய லெட்டுகுபூரி தானுக்கு (Letekupukhuri Than) விஜயம் செய்துள்ளார். இந்த நிலையில் சத்திரங்கள் என்றால் என்ன, அவை எவ்வாறு தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன? ஏன் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு வாக்கெடுப்புத் திட்டமாக மாறுகின்றன? என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காண்போம்.

சத்திரங்கள் என்றால் என்ன?

16 ஆம் நூற்றாண்டின் நியோ-வைஷ்ணவ சீர்திருத்த இயக்கத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட துறவற நிறுவனங்கள் தான் சத்திரங்கள். இதனை வைணவ புனித-சீர்திருத்தவாதி ஸ்ரீமந்த சங்கரதேவா (1449-1596) தொடங்கினார். இந்த துறவி அசாம் முழுவதும் பயணம் செய்து, தனது போதனைகளை பரப்பி, சமத்துவ சமுதாயத்தை பரப்பியபோது, இந்த சத்திரங்கள் 16 ஆம் நூற்றாண்டில் மத, சமூக மற்றும் கலாச்சார சீர்திருத்தங்களின் மையங்களாக நிறுவப்பட்டன. இன்று, அசாம் மாநிலம் முழுவதும் சத்திரங்கள் பரவி காணப்படுகின்றன. இங்கு இசை (போர்கீட்), நடனம் (சத்ரியா) மற்றும் தியேட்டர் (பவுனா) ஆகியவற்றுடன் சங்கர்தேவாவின் தனித்துவமான `கலை மூலம் வழிபாடு’ அணுகுமுறை ஊக்குவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு சத்திரத்திற்கும் ஒரு வழிபாட்டு மண்டபம் அதன் கருவாக உள்ளது மற்றும் இதற்கு ஒரு செல்வாக்கு மிக்க “சத்திராதிகர்” அதாவது சத்திர அதிகாரி தலைமை தாங்குவார். இங்கு பக்தாஸ் என்று அழைக்கப்படும் துறவிகள் இளம் வயதிலேயே சத்திரங்களில் சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள் எந்த வகையான சத்திரத்தில் சேர்க்கப்படுகின்றனர் என்பதைப் பொறுத்து அவர்கள் பிரம்மச்சாரிகளாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து திங் கல்லூரியின் முதல்வரும் சத்ரியா அறிஞருமான பிமன் ஹசாரிகா, "அசாம் முழுவதும் சுமார் 900 சத்திரங்கள் உள்ளன. ஆனால், முக்கிய மையங்கள் போர்டோவா (நாகான்), மஜூலி மற்றும் பார்பேட்டா ஆகிவை ஆகும். இந்த நிறுவனங்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் அசாமி கலாச்சாரத்தின் மையமாக உள்ளன” என்று கூறியுள்ளார்.

சங்கர்தேவா கூறும் தத்துவம் என்ன?

சங்கர்தேவா ஏகா-ஷரனா-நாம்-த்ரமா என்று அழைக்கப்படும் பக்தியின் ஒரு வடிவத்தை அசாம் முழுவதும் பரப்பினார். மேலும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க சாதி வேறுபாடுகள், மரபுவழி பிராமண சடங்குகள் மற்றும் பிற தியாகங்களிலிருந்து விடுபட்டார். அவரது போதனை சிலை வழிபாட்டிற்கு பதிலாக ஜெபம் மற்றும் கோஷமிடுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. அவரை பொறுத்தவரை தர்மம் என்பது தேவா (கடவுள்), நாம் (பிரார்த்தனை), பகத் (பக்தர்கள்), மற்றும் குரு (ஆசிரியர்) ஆகிய நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டது.

எவ்வாறாயினும், சங்கர்தேவாவின் மறைவுக்குப் பிறகு, வைணவ இயக்கத்தின் தன்மை கணிசமாக மாறிவிட்டது என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். இது குறித்து பேசிய கிருஷ்ணா காந்தா ஹேண்டிகி ஸ்டேட் ஓபன் பல்கலைக்கழகத்தின் வரலாற்று உதவி பேராசிரியர் ப்ரீத்தி சலிலா ராஜ்கோவா "அவரது மறைவுக்குப் பிறகு, அவரது சீடர்களிடையே கருத்தியல் வேறுபாடுகள் காரணமாக, சத்திரங்கள் நான்கு சுயாதீன குறுங்குழுவாத பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இதன் விளைவாக, சத்திரங்கள் அதன் அடிப்படை குறிக்கோளிலிருந்து விலகி, அசல் சீர்திருத்த உந்துதலையும் இழந்தது" என்று கூறினார்.

சாத்திரங்களுக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பு:

அஹோம் ஆட்சியின் போது, சத்திர அதிகாரிகள் மன்னர்களிடமிருந்து நிலம் அல்லது பணம் வடிவில் ஏராளமான நன்கொடைகளைப் பெற்றனர். இருப்பினும் அந்த காலத்தில் சத்திரங்கள் அரசியல் கட்டுப்பாட்டிற்கு அப்பால் இருந்ததாக கல்லூரி பேராசிரியர் ஒருவர் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது, "அப்போதெல்லாம் கோயில்களைப் போல, சத்திரங்களுக்கு பெரிய ஆதரவு தேவையில்லை. ஏனென்றால் அவை தன்னிறைவு பெற்றவை. அவை தங்களைத் தக்கவைத்துக் கொள்ளக் கூடியவை. எனவே சாத்திரங்கள் ஒருபோதும் ஆதரவைத் தேடவில்லை. அது தானாகவே வழங்கப்பட்டது. ஆனால் இப்பொது எல்லாமே மாறிவிட்டது. இன்றைய காலகட்டங்களில் அரசியல் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மாநில மற்றும் மத்திய அரசின் வருடாந்திர மானியங்கள் சாத்திரங்களுக்கு வழங்கப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் கருத்துக்கணிப்பு மையமாக மாறிய சத்திரங்கள்:

இப்பொது, அசாமில் பாஜகவின் ஒரு முக்கிய வாக்கெடுப்புத் திட்டமாக சத்திரங்கள் மாறியுள்ளன. அசாமில் சத்திரங்கள், அரசியல் மற்றும் தேர்தல்கள் அடையாளத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக, சட்டவிரோத குடியேற்றவாசிகளால் சத்திரத்திற்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டதாக பல்வேறு கூற்றுகளும் உள்ளன. பாஜக அசாமியின் அடையாளத்தை ஒரு பிரச்சினையாக மாற்றியபோது, 2016 தேர்தல்களிலும், 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், குறிப்பாக 2016 ஆம் ஆண்டில், சத்திரங்களும் அத்துமீறல்களும் ஒரு மையப் பகுதியாக மாறியது.

2016ல் ஆட்சிக்கு வந்தபின், பாஜக சத்திர நிலத்தைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவர்கள் 2019ல் சட்டசபையில் ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தினர். இது சத்திரங்களுக்கு சொந்தமான நிலத்திலிருந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநிலத்திற்கு அதிகாரம் அளித்தது. அதன் வளர்ச்சிக்காக பல திட்டங்களைத் தொடங்கியது. ஆகஸ்ட் 2020ல், அசாம் தரிசனத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 8,000 மடாலயங்களுக்கு தலா 2.5 லட்சம் தருவதாக கட்சி தெரிவித்துள்ளது. இதன் காரணமாகேவ, அசாமில் அரசியல் பின்புலமாக இந்த சத்திரங்கள் பார்க்கப்படுவது நிரூபணமாக்கப்பட்டுள்ளது. ஆட்சியை பிடிக்க இந்த சத்திரங்கள் ஒரு உந்துதலாகவே பார்க்கப்படுகின்றன.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Ram Sankar
First published: