• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • ஹெச்.ராஜாவுக்கு ஏன் இந்த நிலைமை? - குழம்பிய காரைக்குடி வாக்காளர்கள்

ஹெச்.ராஜாவுக்கு ஏன் இந்த நிலைமை? - குழம்பிய காரைக்குடி வாக்காளர்கள்

ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தான் ஒரு பாஜக வேட்பாளர் என்பதை முன்னிருத்தாமலும், குளறுபடியாகவும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையால் பாஜகவினரும், வாக்காளர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

  • Share this:
காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ஹெச்.ராஜா தேர்தல் அறிக்கை விளம்பர  பக்கத்தில் தான் ஒரு பாஜக வேட்பாளர் என்பதைக் கூட சொல்லாமல், தன் கட்சிப் பெயரையும் வெளிப்படுத்தாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜக வேட்பாளர்  என்று அறிவிப்பு செய்தால் வாக்களர்களிடம் வாக்கு கிடைக்காது என்பதை  உணர்ந்து தவிர்த்து உள்ளாரா என்கிற சந்தேகம் வாக்காளர்களிடம் எழுந்துள்ளது.

அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர் என்றும், இலையில் மலர்ந்த  தாமரைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்றும் வாக்கு சேகரிக்கிறார். வாக்குக்காக கட்சி கொள்கையை கட்சி பெயரை ஒதுக்கிய ஹெச்.ராஜாவை நினைத்து பாஜக தொண்டர்கள் மன வேதனையில் உள்ளனர்.மேலும், குளறுபடியான தேர்தல் வாக்குறுதியால் வாக்காளர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.



காரைக்குடி பகுதியில் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள  அம்ருத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவேன் என்று கூறியுள்ளார். மேலும், சிப்காட் தொழிற்பேட்டையே காரைக்குடியில் இல்லை இல்லாத சிப்காட் தொழிற்பேட்டையை புரனமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 2019 ம் ஆண்டு  ஆகஸ்டு மாதம் 29ம் தேதி செட்டிநாடு கன்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் நான் வெற்றி பெற்றால் செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு புவிசார் குடியீடு பெற்றுத் தரப்படும் என தேர்தல்  வாக்குறுதி கொடுத்திருப்பது வாக்காளர்களுடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: