H RAJA JI DOES NOT TRANSLATES WELL AMIT SHAH IN VILUPPURAM RALLY MUT
நீங்க சரியா மொழிபெயர்ப்பு செய்யவில்லை : மேடையில் ஹெச்.ராஜாவிடம் கூறிய அமித் ஷா
உள்துறை அமைச்சர் அமித் ஷா
நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நீங்கள் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று பேசினார் அமித் ஷா.
தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா விழுப்புரத்தில் தேர்தலை முன்னிட்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதை ஹெச்.ராஜா மொழிபெயர்த்துக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் 2ஜி, 3ஜி, 4ஜி என்று திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்த அமித் ஷா அப்போது ஹெச்.ராஜாவிடம் ஒரு முறைக்கு இருமுறை 4ஜி பற்றிக் கூறி சரியா மொழிபெயருங்க என்றார், பிறகு கூட்டத்தினரை நோக்கி ‘ராஜா ஜி நீங்கள் சரியாக மொழிபெயர்ப்பு செய்ய மாட்டேங்கிறீங்க’ என்றார்.
அமித் ஷா பேசியதை மொழிபெயர்த்த ஹெச். ராஜா, “4ஜி சோனியா காந்தியோடது” என்றார். உடனே அவரை நிறுத்திய அமித் ஷா மீண்டும் அழுத்திக் கூறினார். பிறகு முழுக்க ட்ரான்ஸ்லேட் பண்ணுங்க என்றார், உடனே ஹெச்.ராஜா, ‘இப்போது அவர்கள் தமிழ்நாட்டுக்குள்ளேயே...’ என்று கூறிய போது, அமித் ஷா ‘ராஜா ஜீ சரியா ட்ரேன்ஸ்லேட் செய்ய மாட்டேங்கிறார்’ என்று இந்தியில் கூறினார்.
அந்தக் கூட்டத்தில் அமித் ஷா பேசும்போது, ரூ.12 லட்சம் கோடி ஊழைல் நடைபெற்றபோது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தது. 2ஜி, 3,ஜி , 4 ஜி எல்லாம் தமிழகத்தில் உள்ளது. எல்லாமே திமுக, காங்கிரஸ் கட்சி குடும்பத்தில் உள்ளது. திமுகவில் 3, காங்கிரஸில் 4 குடும்பத்தினர் ஆட்சியில் உள்ளனர். 2ஜி என்றால் மாறன். 3 ஜி என்றால் கருணாநிதி 4 ஜி என்றால் நேரு குடும்பத்தினர்.
தமிழ் கலாச்சாரம் பற்றி இவர்கள் பேசுகிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் உள்ளூர் மொழியைக் கொண்டுவந்துள்ளோம். காங்கிரஸ் காரர்கள் இந்தாலிய மொழி என்ன மொழி என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.
✓ 2G stands for 2 Generations of Maran family
✓ 3G stands for 3 Generations of Karunanidhi family
✓ 4G stands for 4 Generations of Gandhi family pic.twitter.com/WQ39krETGD
ஜல்லிக்கட்டு பார்ப்பதற்கு ராகுல்காந்தி வருகிறார். ஆனால் அதற்கு தடை விதித்து காங்கிரஸ் அரசு. தற்போது தமிழகத்திற்கு ஜல்லிக்கட்டை பாஜக கொண்டுவந்துள்ளது.
தமிழக அரசுக்கு என் பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனா காலத்தில் சிறப்பான நிர்வாகம் செய்தது. நல்லாட்சிக்கான விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. நீர் மேலாண்மையில் அனைத்து மாநிலங்களை விட தமிழகம் சிறப்பாக செயல்பட்டது.
நிதி அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனும், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். எனவே நீங்கள் பாஜக கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும், என்று பேசினார் அமித் ஷா.