அதிகார அரசியலில் மட்டுமே கவனம் வேண்டாம்; கடந்து செல்லுங்கள்: கட்சி நிர்வாகிகளுக்கு மோடி உத்தரவு

பிரதமர் மோடி

கூட்டத்தின் முக்கிய நோக்கமே, வரவிருக்கும் 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்தான். அப்போது தேர்தல் பொறுப்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் இந்த 5 மாநிலங்களில் நிலவரம் என்னவென்பதை கட்சித் தலைமையிடம் பகிர்ந்து கொண்டனர்.

 • Share this:
  கொரோனா லாக் டவுன் முடிந்த பிறகு நேற்று பாஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்து நடத்திய கூட்டத்தில் பிரதமர் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

  நேற்று நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில், நரேந்திர மோடி அரசின் சீர்த்திருத்தங்கள் மற்றும் விவசாயச்சட்டங்கள், தொழிலாளர் சட்டங்களைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

  இந்தத் தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சியைத் தாக்கிக் குறிப்பிட்டபோது, “எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் மிகுந்த வெறுப்பில் உள்ளது, பாஜக ஆட்சி எதைச் செய்தாலும் எதிர்ப்பதே வேலையாகி விட்டது. எப்படியிருந்தாலும் பாஜக விவசாயிகளிடம் விஷயங்களை எடுத்துச் செல்லும், காங்கிரஸ் பரப்பும் பொய்ச்செய்திகளை அம்பலப்படுத்தும்” என்று கூறியுள்ளது.

  புதுடெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். நிர்வாகிகள் ஜே.பி.நட்டா தலைமையின் கீழ் கருத்துடன் செயல்பட்டு அதிகார அரசியலைக் கைவிட்டு அதைக் கடந்து சென்று மக்கள் சேவையாற்ற வேண்டும் என்றார்.

  கட்சியின் பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த போது, ‘நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் ஒரு பெரும் தொகுப்பு, சமீபத்திய அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் அதில் பேசப்பட்டுள்ளன.

  பிரதமர் மோடி நிர்வாகிகளுடன் இகவும் அன்னியோன்யமாக பேசினார். அதிகார அரசியல் அல்ல நம் குறிக்கோள் சப்கா சாத் சப்கா விகாஸ் என்ற மக்கள் சேவையே மகேசன் சேவை என்றார்.

  பிரதமர் நரேந்திர மோடியின் அரசு மேற்கொண்ட அனைத்து சீர்த்திருத்த நடவடிக்கைகள் விவசாயச் சட்டங்கள், தொழிலாளர் சட்டங்கள் ஆகிவற்றைப் பாராட்டி அரசியல் தீர்மானம் நிறைவேற்றினோம். கோவிட் 19 லாக் டவுன் காலத்தில் மக்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் ஆத்ம நிர்பர் திட்டத்தை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றினோம்’ என்றார்.

  ஜேபி.நட்டா கூறும்போது, பழங்குடிபகுதிகளில் சென்று விவசாயிகளிடம் இந்தச் வேளாண் சட்டங்கள் நாட்டுக்கு நல்லது என்று எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார். மகளிர் அணி அரசின் ஊட்டச்சத்து திட்டத்தை மேலும் எடுத்துச் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளோம்” என்றார்.

  கூட்டத்தின் முக்கிய நோக்கமே, வரவிருக்கும் 5 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்தான். அப்போது தேர்தல் பொறுப்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் இந்த 5 மாநிலங்களில் நிலவரம் என்னவென்பதை கட்சித் தலைமையிடம் பகிர்ந்து கொண்டனர்.
  Published by:Muthukumar
  First published: