சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் உடன் நேரடியாக மோதும் தமிழ் மாநில காங்கிரஸ்

சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் உடன் நேரடியாக மோதும் தமிழ் மாநில காங்கிரஸ்

ஜி.கே.வாசன் - முதல்வர் பழனிசாமி

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு மற்றும் கிள்ளியூர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாக மோதுகிறது.

  • Share this:
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 6 இடங்களை ஒதுக்குவதாக நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழ் காங்கிரஸ் கட்சி 12 இடங்களை கேட்டுவந்த நிலையில் 6 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக தலைமை. அதுமட்டுமின்றி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அ.தி.மு.க-வின் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுகின்றனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 6 தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை தமாகா வெளியிட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

திரு.வி.க நகர் - கல்யாணி,
லால்குடி - தர்மராஜ்,
பட்டுக்கோட்டை - என்.ஆர்.ரங்கராஜன்,
தூத்துக்குடி - விஜயசீலன்,
கிள்ளியூர் - ஜூட் தேவ்,
ஈரோடு கிழக்கு - யுவராஜா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஈரோடு கிழக்கு மற்றும் கிள்ளியூர் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியுடன் நேரடியாக மோதுகிறது.
Published by:Ramprasath H
First published: