பாஜக உடன் தமாகா இணைப்பா? ஜி.கே. வாசன் விளக்கம்

  • Share this:
பாஜக உடன் தமாகாவை இணைக்கப்போவதாக வெளியான தகவல் வடிகட்டிய பொய் என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

நடைபெற உள்ள மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலில் அதிமுக சார்பில் மூன்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது. அந்த பட்டியலில் இடம்பெற்றோரில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் ஒருவர்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக சீட் கேட்டிருந்த நிலையில், மற்றொரு கூட்டணி கட்சியான தமாகவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது பரபரப்பாக பேசப்பட்டது. வாசன் தேர்வில் பாஜக தலையீடு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டன.


இது குறித்து நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஜி.கே. வாசன், மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட தமாகாவுக்கு வாய்ப்பு வழங்கியதில் பாஜகவுக்கு தொடர்பில்லை என்றார். மேலும், தங்கள் கட்சி சார்பில் மாநிலங்களவை சீட்டுக்காக பலமுறை கோரிக்கை வைத்ததாகவும், கனிவுடன் அதிமுக பரிசீலித்ததாகவும் வாசன் தெரிவித்தார். மாநிலங்களவைக்கு செல்வதன் மூலம் தமாகாவை பலப்படுத்தவும், வலுப்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வாசன் குறிப்பிட்டார்.

பாஜகவுடன் தமாகா இணைக்கப்போவதாக வெளியான தகவல்கள் குறித்து பதிலளித்த வாசன், அது வடிகட்டிய பொய் என்றார். மேலும், தேசிய அளவில் ஏற்றுக்கொண்ட, மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சியாக பாஜக உள்ளது என்றும் வாச தெரிவித்தார்.

பேட்டி:

 


First published: March 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading