நான் பிராமணப் பெண், இந்து தர்மத்தை எனக்கு இவர்கள் கற்றுக் கொடுக்க வேண்டாம்: பாஜக மீது மம்தா ஆவேசம்

மம்தா பானர்ஜி

இடதுசாரிகள் அன்று என் கார் மீது பெட்ரோல் குண்டை வீசினர், அப்போது என் சார்பாக யாரும் இல்லை. நான் நந்திகிராமில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளேன், 3 மாதங்களுக்கு ஒரு முறை இங்கு வருவேன். சில நாட்கள் கழித்து இங்கு வந்து குடிசையில் தங்குவேன்.

  • Share this:
    நானும் ஒரு இந்துப் பெண் தான், பிராமணப்பெண், எனக்கு இந்து தர்மத்தைப் பாற்றி பாஜக பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாகப் பேசினார்.

    மேற்கு வங்கத்தில், எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில், ஆளும் திரிணமுல் காங்கிரசுக்கு, பாஜக கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.மம்தாவுடன் மிக நெருக்கமாக இருந்த, மூத்த தலைவரான சுவேந்து அதிகாரி, கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தார்.நந்திகிராம் உள்ளிட்ட பகுதிகளில், அவருக்கு, பெரும் செல்வாக்கு உள்ளது.

    'நந்திகிராம் தொகுதியில், என்னை எதிர்த்து மம்தா போட்டியிடுவாரா. அவரை, 50 ஆயிரம் ஓட்டு வித்தி யாசத்தில் தோற்கடிக்காவிட்டால், அரசியலில் இருந்தே விலகுகிறேன்' என, சுவேந்து அதிகாரி சவால் விட்டார்.பா.ஜ., வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், நந்திகிராம் தொகுதியின் வேட்பாளராக, சுவேந்து அதிகாரி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

    அந்த தொகுதியில் போட்டியிடுவதாக, மம்தாவும் அறிவித்தார்.நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை, மம்தா பானர்ஜி இன்று தாக்கல் செய்ய உள்ளார்.

    இந்நிலையில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜி சந்திபாத் ஸ்லோகங்களை கூறினார். என் பெயரைக் கூட மறப்பேன், நந்திகிராமை மறக்க மாட்டேன், என்றார்.

    “என்னிடம் இந்துத்துவா முத்திரையைப் பயன்படுத்தி அரசியல் செய்ய வேண்டாம். நான் இந்துப் பிராமணப் பெண். என் வீட்டிலிருந்து கிளம்பும் முன் ஒவ்வொரு நாளும் சந்திபாத் செய்துவிட்டுத்தான் கிளம்புகிறேன். ராஜஸ்தான், குஜராத்திலிருந்து வந்தவர்களெல்லாம் இங்கு பிறந்தவர்கள் பேசுவதுதான் கொடுமை, அதை விடக் கொடுமை நான் ஏதோ வெளிமாநில ஆள் போல் கதைக்கட்டுகின்றனர்.

    என்னுடைய பழைய தொகுதியான பாபானிபூர் சென்று பாருங்கள் நான் எவ்வளவு வளர்ச்சியை அங்கு ஏற்படுத்தியிருக்கிறேன் என்பது புரியும். நந்திகிராமை மாதிரி தொகுதியாக மாற்றுவேன் ஒரு வீட்டில் கூட வேலையில்லாதோர் என்ற நிலைமை இருக்காது. கல்வியற்றவர் என்று அங்கு யாரும் இருக்க மாட்டார்கள் அனைவருக்கும் கல்வி அளிப்பேன்.

    இடதுசாரிகள் அன்று என் கார் மீது பெட்ரோல் குண்டை வீசினர், அப்போது என் சார்பாக யாரும் இல்லை. நான் நந்திகிராமில் வாடகைக்கு வீடு எடுத்துள்ளேன், 3 மாதங்களுக்கு ஒரு முறை இங்கு வருவேன். சில நாட்கள் கழித்து இங்கு வந்து குடிசையில் தங்குவேன்.

    நான் மக்களின் பைகளில் பணத்தைத் திணித்து வாக்கு சேகரிப்பவள் அல்ல, ஏப்ரல் 1ம் தேதி தெரியும் அனைவரும் ஏப்ரல் ஃபூல் ஆகப்போகிறார்கள்.” இவ்வாறு பேசினார் மம்தா
    Published by:Muthukumar
    First published: