• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • Exclusive : செல்லூர் ராஜூ-விடம் கார் இல்லையாம், ஆனால் என்னிடம் ஆட்டோ உள்ளது - மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாயி

Exclusive : செல்லூர் ராஜூ-விடம் கார் இல்லையாம், ஆனால் என்னிடம் ஆட்டோ உள்ளது - மதுரை மார்க்சிஸ்ட் வேட்பாளர் பொன்னுத்தாயி

சிபிஎம் வேட்பாளர் பொன்னுத்தாயி

சிபிஎம் வேட்பாளர் பொன்னுத்தாயி

மக்களிடம் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. திமுக கூட்டணிக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது.

  • Share this:
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக முதல் முறையாக களம் காண்கிறார் பொன்னுத்தாயி. மதுரையின் முன்னாள் மேயராக இருந்த ராஜன் செல்லப்பாவை எதிர்த்து போட்டியிடுகிறார்.இவருடைய கணவர் கருணாநிதி சொந்தமாக ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி கொண்டிருக்கிறார். அந்த ஆட்டோவில் அமர்ந்தபடி நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு அவர் பிரேத்யேக பேட்டியளித்தார்.

செய்தியாளர் : முதல் முறையாக சட்டமன்ற தொகுதியில் களம் காண்கிறீர்கள்... வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பொன்னுத்தாயி : திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நிச்சயம் வெற்றி பெறுவேன்.திமுக தலைமையிலான கூட்டணிக்கு மக்களிடம் வெகுவான ஆதரவு உள்ளது.

செய்தியாளர் : நாம் ஏன் இப்போது ஆட்டோவில் அமர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறோம்...?

பொன்னுத்தாயி : கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ சொந்தமாக கார் இல்லை என்று வேட்பு மனு தாக்கல் விபரங்களில் தெரிவித்துள்ளார். ஆனால், எனக்கு, என்னுடைய கணவருக்கு சொந்தமாக ஆட்டோ உள்ளது.எனக்கு சொந்தமாக வாகனம் உள்ளது என்ற பெருமையோடு ஆட்டோவில் அமர்ந்து பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறேன்.

செய்தியாளர் : வெற்றி பெற்று வந்தால் மக்களுக்கு என்ன செய்வீர்கள்?

பொன்னுத்தாயி : கடந்த 10 வருடங்களாக திருப்பங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் எந்தவிதமான அடிப்படை பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பா அதற்காக குரல் கொடுக்கவில்லை.நான் வெற்றி பெற்றால் அடிப்படை பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். அரசு கலைக் கல்லூரி துவக்கப் படும். மாநகராட்சி வார்டுகள் பாதாள சாக்கடை பிரச்சனை தீர்க்கப்படும். விவசாய பணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 150 நாட்கள் அதிகரிக்கவும், கூலியை 400 ரூபாய் உயர்த்தி குரல் கொடுப்பேன்.

செய்தியாளர் : முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பாவை எதிர்த்து போட்டியிடுவது சவாலாக உள்ளதா?

பொன்னுத்தாயி : ராஜன் செல்லப்பாவை எதிர்த்து போட்டியிடுவதில் எனக்கு எந்தவித சவாலும் இல்லை. எங்களிடம் மக்கள் சக்தி இருக்கிறது. மக்களிடம் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி உள்ளது. திமுக கூட்டணிக்கு மக்களிடையே வரவேற்பு உள்ளது.எங்களுடைய வெற்றி உறுதிசெய்யப்பட்ட வெற்றி. வாக்கு வித்தியாசத்தில் அதிகரிப்பதற்காக மக்களை சந்தித்து வாக்கு கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

செய்தியாளர் : வேறு சில நிர்பந்தம் காரணமாகவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி ஒதுக்கியதாக கூறப்படுகிறது... கள நிலவம் எப்படி உள்ளது?

பொன்னுத்தாயி : கூட்டணியின் சார்பாக எங்களுக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் தொண்டர்கள் அனைவரும் ஆர்வமாக கரம் கோர்த்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: