முகப்பு /செய்தி /அரசியல் / EXCLUSIVE | உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் எத்தனை கேள்வி கேட்டிருக்கிறார் தெரியுமா?

EXCLUSIVE | உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் எத்தனை கேள்வி கேட்டிருக்கிறார் தெரியுமா?

EXCLUSIVE | உங்கள் தொகுதி எம்.எல்.ஏ. சட்டப்பேரவையில் எத்தனை கேள்வி கேட்டிருக்கிறார் தெரியுமா?

தமிழக சட்டமன்றத்தில் உங்களது எம்.எல்.ஏ எத்தனை கேள்விகளை எழுப்பியுள்ளார்? எந்தக்கட்சி எம்.எல்.ஏ அதிகளவில் கேள்வி எழுப்பியுள்ளார்? முக்கிய தலைவர்கள் கேட்ட கேள்விகளின் எண்ணிக்கை குறித்து இந்த பிரத்யேக தகவல்கள்.

  • Last Updated :

மக்களால் தேர்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களுக்காக பேசும் இடம் சட்டமன்றம்.. தமிழகத்தின் 15வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகள் குறித்து தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டது நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி.

சட்டப்பேரவை செயலாளர் அலுவலகத்திலிருந்து கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ,15வது சட்டப்பேரவையில், செஞ்சி தொகுதி திமுக உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் தான் அதிக கேள்விகளை எழுப்பிய எம்.எல்.ஏ.

கடந்த ஜூலை மாதம்வரை 12,675 கேள்விகளை மஸ்தான் கேட்டுள்ளார்.

கும்பகோணம் தொகுதியில் தேர்வான திமுகவைச் சேர்ந்த ஜி.அன்பழகன் 4877 கேள்விகளை கேட்டுள்ளார்.

அதிமுகவைச் சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு 2516 கேள்விகளை சட்டமன்றத்தில் அவரது தொகுதி சார்பில் எழுப்பியுள்ளார்.

திருவையாறு திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகர் 2332 கேள்விகளை கேட்டுள்ளார். குளச்சல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸ் சட்டமன்றத்தில் 2264 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அடுத்தபடியாக, ஒரத்தநாடு திமுக எம்.எல்.ஏ எம்.ராமச்சந்திரன் தனது தொகுதி மக்கள் சார்பில் 2254 கேள்விகளை கேட்டுள்ளார்.

பரமத்திவேலூர் திமுக எம்.எல்.ஏ கே.எஸ்.மூர்த்தி 1971 கேள்விகளையும், திருவிடைமருதூர் திமுக எம்.எல்.ஏ டாக்டர் கோவி.செழியன் 1428 கேள்விகளையும், திருப்பத்தூர் திமுக எம்.எல்.ஏ அ.நல்லதம்பி 1370 கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

மாதவரம் திமுக எம்.எல்.ஏ எஸ்.சுதர்சனம் 1147 கேள்விகளையும், ஆலங்குடி எம்.எல்.ஏ சிவ வி.மெய்யநாதன் 1055 கேள்விகளையும், கிள்ளியூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ எஸ்.ராஜேஷ்குமார் 1044 கேள்விகளை கேட்டுள்ளனர்.

தொகுதியின் மக்கள் பிரச்னையை அரசின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில்தான் அதிக கேள்விகளை கேட்டதாக சொல்கிறார் அதிக கேள்விகளை எழுப்பியர் செஞ்சி தொகுதி திமுக உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான்.

சட்டமன்றத்தில் 10க்கும் குறைவான கேள்விகளை எழுப்பிய எம்.எல்.ஏக்கள் யார்?

நிலக்கோட்டை அதிமுக எம்.எல்.ஏ எஸ்.தேன்மொழி ஒரு ஒரே கேள்வியை மட்டுமே சட்டமன்றத்தில் எழுப்பியுள்ளார் என்கிறது ஆவணம்.

ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ ஏ.மகாராஜன் 2 கேள்விகளையும் மட்டுமே எழுப்பியுள்ளார்.

திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தனது தொகுதி மக்களுக்காக 2 கேள்விகளை மட்டுமே எழுப்பியுள்ளார் என்கிறது சட்டப்பேரவை ஆவணம்.

அதேபோல், விழுப்புரம் திமுக எம்.எல்.ஏ கே.பொன்முடி 2 கேள்விகளையும், திருப்பத்தூர் திமுக எம்.எல்.ஏ கே.ஆர்.பெரியகருப்பன் 3 கேள்விகளையும், சாத்தூர் அதிமுக எம்.எல்.ஏ எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் 4 கேள்விகளையும் கேட்டுள்ளனர்.

ஏற்காடு அதிமுக எம்.எல்.ஏ ஜி.சித்ரா, அரூர் அதிமுக எம்.எல்.ஏ வி.சம்பத்குமார், பெரம்பூர் திமுக எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் ஆகியோர் தலா 6 கேள்விகளை கேட்டுள்ளனர்.

அதேபோல், நாமக்கல் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், அருப்புக்கோட்டை திமுக எம்.எல்.ஏ கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், திமுக தலைவரும், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் தலா 7 கேள்விகளை எழுப்பியுள்ளதாக சட்டப்பேரவை ஆவணம் தெரிவிக்கிறது.

top videos

    தேர்தெடுக்கப்படும் மக்களுக்காக உறுப்பினர்கள் பேசவேண்டிய இடமான சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் அதிகரிக்க வேண்டும் என்கிறார் மூத்த பேராசிரியர் ராமு மணிவண்ணன். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் கூடுதல் அக்கரையுடன் களமாட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

    First published:

    Tags: ADMK, Breaking News, DMK, Exclusive, MLA, TN Assembly