சிஎன்என்-
நியூஸ் 18 தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் ஜக்கா ஜேக்கப்-புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர், நாடாளுமன்றத் தேர்தலைவிட மிகப்பெரிய வெற்றியை இந்த
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக மீது ஆளுங்கட்சி தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக-வில் வாரிசு என்பதற்காக யாரையும் திணிக்கவில்லை என்றும், தான் படிப்படியாகவே வளர்ந்துவந்ததாகவும் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
முதலமைச்சர் வேட்பாளராக தான் இருப்பதால்,
திமுக அதிக இடங்களில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே, காங்கிரஸுக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
2024-ம் ஆண்டில் பிரதமராக ராகுல் காந்தி தேர்வுசெய்யப்படுவார் என்ற நம்பிக்கை தனக்கு தற்போதும் இருப்பதாக
மு.க.ஸ்டாலின் கூறினார்.
அதிமுக அரசுக்கு எதிரான சுனாமியே வீசுவதாகவும், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றிபெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திமுக-வின் வாக்குகளைப் பிரிப்பதற்காக பாஜக-வின் தூண்டுதலின்பேரில்,
மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஆகியவை தேர்தலில் போட்டியிடுவதாகவும் திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.