ரஜினியுடன் பாஜக கூட்டணி? அமித்ஷா சிறப்பு பேட்டி

Amit Shah To News18 | பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா உடன் நியூஸ்18 குழும முதன்மை ஆசிரியர் ராகுல் ஜோஷி நடத்திய நேர்காணலில் தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார்.

ரஜினியுடன் பாஜக கூட்டணி? அமித்ஷா சிறப்பு பேட்டி
அமித்ஷா
  • Share this:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணியை பலப்படுத்த முயன்று வருகின்றன. தமிழகத்தில் பாஜக தனது பலத்தை கூட்ட நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அண்மையில் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர்.  கூட்டணி வெற்றிப்பெற்றால், ஆட்சியில் பங்கு என்ற ரீதியில் தனது விருப்பத்தை பாஜக வெளிப்படையாக தெரிவித்து வருகிறது. அதேசமயம், தேர்தலை எதிர்கொள்ள நடிகர் ரஜினிகாந்த் களம் இறங்குவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா உடன் நியூஸ்18 குழும முதன்மை ஆசிரியர் ராகுல் ஜோஷி நடத்திய நேர்காணலில் தமிழக அரசியல் குறித்து பேசியுள்ளார்.

அப்போது, ரஜினியுடன் கூட்டணி வைக்கும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமித்ஷா, ரஜினிகாந்த் அரசியலில் இன்னும் நுழையவில்லை என்றும், கூட்டணி குறித்து முடிவெடிக்க இன்னும் நாட்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும், தமிழகத்தில் பாஜக குறித்தும், கூட்டணி குறித்த பேச்சு தொடங்கியதா என்பது குறித்தும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அமித்ஷா, பாஜகவை பலப்படுத்த சில மாற்றங்கள் செய்துக்கொண்டிருப்பதாகவும், அதிமுக தங்களுக்கு நெருக்கமான கட்சி என்றும், அவர்களோடு இரண்டு தேர்தலை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, பீகார் அரசியல், காஷ்மீர் பிரச்னை, விவசாய சட்டம் உட்பட நாட்டின் பல்வேறு பிரச்னைகள் குறித்தும் அமித்ஷா பேசினார்.
ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்

First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading