Exclusive : அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து சசிகலாவின் ஆதரவு கேட்பது குறித்து முடிவெடுப்போம்- டிடிவி தினகரன்

Exclusive : அமமுக தலைமையில் கூட்டணி அமைத்து சசிகலாவின் ஆதரவு கேட்பது குறித்து முடிவெடுப்போம்- டிடிவி தினகரன்

டி.டி.வி.தினகரன்

 எங்கள் தலைமையில் கூட்டணிக்கு யார் வந்தாலும் தயார், அதற்காக எந்த கட்சியையும் எங்கள் கூட்டணி வாங்க என அழைப்பது நாகரீகமாக இருக்காது - டிடிவி தினகரன்

  • Share this:
சட்டமன்ற தேர்தல் குறித்தும் கூட்டணி அமைப்பது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டியளித்தார்.

டிடிவி தினகரன் உடன் பேட்டியின் போது,

கேள்வி  : அமமுக-வோடு கூட்டணி அமைக்க தேமுதிக பேசி வருகிறதா?

பதில் : கத்திரிக்காய் முத்தினா சந்தைக்குத் தான் வரவேண்டும். உண்மை என்ன என்பது இரண்டு நாட்களில் தெரிந்துவிடும்.

கேள்வி  :  நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் கட்டூரைகளில் ஒரு பக்கத்தில் அமமுக ஆட்சி, மறு பக்கத்தில் அம்மா ஆட்சி என சசிகலா கட்டூரைகள் இடம்பெருகின்றன. அமமுக ஆட்சிக்கு சசிகலா ஆதரவு இருக்குமா?

பதில் :  சசிகலா அதிமுக பொதுச்செயலாளர், அமமமுக அதிமுகவை மீட்டெடுக்க தொடங்கப்பட்ட கட்சி. அதன் அடிப்படையில் தேர்தலை சந்திக்கிறோம். சசிகலா எனக்கு சித்தி என்பதால் அவர்கள் சார்பாக நான் பேச முடியாது. அவரின் நிலைபாட்டை செய்தியாளர்களை சந்திக்கும்போது தெரிவிப்பார். அமமுக மூன்றாம் அணி அல்ல முதல் அணி. கூட்டணி அமைத்த பிறகு சசிகலாவிடம் ஆதரவு கேட்பது குறித்து முடிவு எடுப்போம்

கேள்வி  : இதற்கு முன்பு செய்தியாளர் சந்திப்பில் அமமுக தலைமையில் கூட்டடணி ஆட்சி அமைத்த பிறகு அதிமுக-வை மீட்டெடுப்போம் என்றார் டிடிவி ஆனால் தற்போது அதிமுக-வுடன் கூட்டணி இல்லை என வெளிப்படையாக சொல்ல மறுக்கிறார் டிடிவி?

பதில் :  சில விஷயங்கள் குறித்து பதில் சொல்லவே விரும்பவில்லை என்னும்போது நீங்களே புரிந்துகொள்ள வேண்டும்

கேள்வி  :  அதிமுக - அமமுக கூட்டணிக்கு பாஜக தரப்பில் இருந்து அழைப்பு வந்தால் ஏற்பீர்களா?

பதில் :  இதுவரை எந்த அழைப்பும் வரவில்லை, இனி அழைப்பு வரும் என நான் நம்பவும் இல்லை

கேள்வி  :  திமுகவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான் பாஜக அதிமுக-வின் நிலைபாடு. அமமுக நிலைபாடும் அதுதான் என்னும்போது கூட்டணிக்கு தயாரா?

பதில் : எங்கள் தலைமையில் கூட்டணிக்கு யார் வந்தாலும் தயார், அதற்காக எந்த கட்சியையும் எங்கள் கூட்டணி வாங்க என அழைப்பது நாகரீகமாக இருக்காது

கேள்வி  : அதிமுக - அமமுக இணைப்புக்கு பாஜக அழுத்தம் கொடுக்கிறதா?

பதில் : இணைப்பு குறித்து ஊடகங்கள்தான் பேசுகின்றன. யாரும் என்னிடம் பேசவில்லை இணைப்பு என்பது வேறு மீட்டெடுப்பு என்பது வேறு.

 
Published by:Vijay R
First published: