மக்கள் நீதி மய்யத்தில் முன்னாள் ஐ.எ.ஏஸ் அதிகாரி சந்தோஷ் பாபு இணைந்துள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அவர் தலைமை அலுவலகத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள கடிதத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளது, “தமிழக அரசின் பல்வேறு உயர்பதவிகளை வகித்தவர் மூத்த ஐ.எ.ஏஸ் அதிகாரி சந்தோஷ் பாபு. நேர்மை, அர்ப்பணிப்பு, செயல்திறன் மற்றும் சமூக அக்கறைக்காக அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டவர்.
இன்னும் 8 ஆண்டுகள் அரசுப் பணி இருந்தபோதும் மக்கள் சேவை செய்ய வேண்டும் எனும் உரிய நோக்கில் தான் வகித்த உயர் பதவியை உதறி, விருப்ப ஓய்வு பெற்றார். வாழ்நாள் முழுக்க சமரசமற்ற நேர்மையோடும் துணிச்சலோடும் ஊழலுக்கு எதிராகப் போராடி வந்த சந்தோஷ் பாபு தமிழகத்தை சீரமைக்கும் அரும்பணியில் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை பெருமகிழ்ச்சியுடன் உங்களுக்கு அறிவிக்கிறேன்.
மிகச்சரியான முடிவினை எடுத்தமைக்கு சந்தோஷ் பாபுவை மனதாரப் பாராட்டுகிறேன். அவரை பொதுச் செயலாளர் - தலைமை அலுவலகம் நியமித்துள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். தான் செய்த பணிகள் அனைத்திலும் முத்திரை பதித்தவர், இதிலும் தடம் பதிப்பார் என்பதில் ஐயம் இல்லை“ என்றுள்ளார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Kamal Haasan, Makkal Needhi Maiam