தேனி மக்களவைத் தொகுதியில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி சார்பாகப் போட்டியிடுகிறார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தந்தைப் பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவார். இவரது தந்தை ஈ.வி.கே.சம்பத்தும் திராவிட அரசியலில் இணைந்துப் பணியாற்றியவர் ஆவார்.
இளங்கோவன் கடந்த 2004-ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி ஆக வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் நடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றார். கடந்த 2014-ம் ஆண்டு அன்றைய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியால் தமிழக காங்கிரஸ் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பார்க்க: தேனி மக்களவைத் தொகுதி ஒரு சிறப்பு பார்வை
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Lok Sabha Key Candidates, Lok Sabha Key Constituency, South Tamil Nadu Lok Sabha Elections 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019, Theni S22p33