இடஒதுக்கீடு பேச்சுகளின் முடிவைப் பொறுத்து தேர்தல் கூட்டணி! - ராமதாஸ் அறிவிப்பு

இடஒதுக்கீடு பேச்சுகளின் முடிவைப் பொறுத்து தேர்தல் கூட்டணி! - ராமதாஸ் அறிவிப்பு

ராமதாஸ்

வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, வருகிற 3-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கூட்டணி தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  iதமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள் கட்சிகளிடையே நடந்து வருகின்றன. இந்த நிலையில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, வருகிற 3-ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையின் அடிப்படையில், கூட்டணி தொடர்பான முடிவு அறிவிக்கப்படும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நேற்றைய தினம் தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் பா.ம.க நிறுவனர் இராமதாஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை என்று தகவல் வெளியானது.

  இதனைதொடர்ந்து கட்சியின் நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய இராமதாஸ், வன்னியர்களின் போராட்டத்திற்கு அதிமுக மதிப்பளித்து, இடஒதுக்கீடு வழங்கினால் மட்டும் தான் கூட்டணி என திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியானது. இந்தநிலையில் பாமகவின் சிறப்பு நிர்வாகக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வெளியாகியுள்ளன. அதில் வன்னியர் இடஒதுக்கீடு குறித்து பிப்ரவரி 3-ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அதிமுக விடுத்த அழைப்பு ஏற்கப்பட்டுள்ளதாகவும், பேச்சுகளின் முடிவைப் பொறுத்து, தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
  Published by:Ram Sankar
  First published: