இடதுசாரிகளுக்கு வாக்களித்தால் பாஜகவை வீழ்த்த முடியாது, திரிணாமுல்தான் பாஜகவை வீழ்த்தும்-மம்தா பானர்ஜி

இடதுசாரிகளுக்கு வாக்களித்தால் பாஜகவை வீழ்த்த முடியாது, திரிணாமுல்தான் பாஜகவை வீழ்த்தும்-மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

இடதுசாரிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் நிச்சயம் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும். துரதிர்ஷ்டமாக மேற்கு வங்கத்தில் வெளி ஆட்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அவர்களால் மாநிலத்தின் ஒற்றுமை சிதைக்கப்படுகிறது.

 • Share this:
  இடதுசாரிகளுக்கு வாக்களித்தால் பாஜகவை வீழ்த்த முடியாது, திரிணாமுல் கட்சிக்கு வாக்களித்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

  மேற்கு வங்கத்தில் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இடதுசாரி முன்னணி ஆதரவாளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

  திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார்.

  அதன் பிறகு அவர் பேசியதாவது:

  பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்ற பிரச்சாரத்தை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இந்தப் பிரச்சாரத்துக்கு ஆதரவு அளித்துவரும் இடதுசாரி பிரிவில் உள்ள அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

  அதேநேரத்தில், மாநிலத்தில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சிக்கு வரமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு உங்கள் வாக்குகளை மீண்டும் இடதுசாரிகளுக்கு அளித்து வீணாக்காமல், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க வேண்டும்.

  இடதுசாரிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் நிச்சயம் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும். துரதிர்ஷ்டமாக மேற்கு வங்கத்தில் வெளி ஆட்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அவர்களால் மாநிலத்தின் ஒற்றுமை சிதைக்கப்படுகிறது.

  இந்த அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபட வேண்டும். அனைத்துச் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகளையும் நான் பாதுகாப்பேன் என உறுதியளிக்கிறேன்".

  இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

  மேற்கு வங்கத்தில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது, முதற்கட்ட வாக்குப் பதிவு வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.

  முன்னதாக தங்கள் தேர்தல் அறிக்கையில் திரிணாமுல் அனைத்து குடும்பங்களுக்கும் குறைந்தபட்ச வருவாய் திட்டத்தின் மூலம், பொதுப்பிரிவை சேர்ந்த ஒரு கோடியே 60 லட்ச குடும்பத்துக்கு மாதம்தோறும் 500 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பட்டியல் இன குடும்பங்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும், இத்தொகை குடும்பத் தலைவிகளின் பெயரில் வரவு வைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  5 ஆண்டுகளில் 10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்படும் எனவும், இரண்டாயிரம் பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

  ஆண்டுக்கு 5 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: