2014-ல் மன்மோகன் கோஷத்தை லேசாக மாற்றி தனதாக்கிய மோடி இன்று மம்தாவின் கோஷத்தை தனதாக்கினார்

பிரதமர் மோடி Vs மமதா பானர்ஜி

இன்று மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மம்தா பானர்ஜி ‘கேலா ஹோபே’ அதாவது நாம் விளையாடத் தொடங்குவோம், அல்லது நாம் விளையாடுவோம் என்ற பொருள் தரும் கோஷத்தை முன் வைக்க அதை பிரதமர் மோடி சற்றே மாற்றியமைத்து, “கேலா ஷேஷ்” என்று அதாவது கேம் ஓவர், ஆட்டம் முடிந்துவிட்டது என்று மாற்றியுள்ளார்.

  • Share this:
2014- லோக்சபா தேர்தலின் போது அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் “விரைவில் நல்ல தினங்கள் வரும்” என்று வைத்த கூற்றை நரேந்திர மோடி ‘அச்சே தின்’ என்று கோஷமாக மாற்றினார்.

இன்று மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி மம்தா பானர்ஜி ‘கேலா ஹோபே’ அதாவது நாம் விளையாடத் தொடங்குவோம், அல்லது நாம் விளையாடுவோம் என்ற பொருள் தரும் கோஷத்தை முன் வைக்க அதை பிரதமர் மோடி சற்றே மாற்றியமைத்து, “கேலா ஷேஷ்” என்று அதாவது கேம் ஓவர், ஆட்டம் முடிந்துவிட்டது என்று மாற்றியுள்ளார்.

மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, “இந்த முறை அவர்கள் கேலா ஹோபே (நாம் விளையாடுவோம்) என்கின்றனர். ஆனால் அவர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். ஆனால் அவர்கள் என்ன ஆட்டத்தைத்தான் விளையாடவில்லை? பெங்காலின் ஏழைகளை சுரண்டி ஒழித்தார், இது ஒலிம்பிக் லெவல் ஊழலாகும்.

ஆனால் இந்த விளையாட்டு முடிய வேண்டும். தீதிக்கும் திரிணாமூலுக்கும் ஆட்டம் முடிந்து விட்டது. இந்த விளையாட்டு முடிந்து வளர்ச்சி தொடங்கவுள்ளது.

இப்படி எதிர்கட்சியினர் கூறுவதையே கொஞ்சம் டிங்கரிங் செய்து வார்த்தை விளையாட்டு ஆடுவதில் மோடி வல்லவர் என்பதற்கான முதல் உதாரணம், ஜனவரி 8, 2014-ல் மன்மோகன் சிங் பொருளாதாரம் பலவீனமாக இருந்த போது, “ஆம் நாம் மோசமான நாட்களை எதிர்நோக்குகிறோம். ஆனால் நல்ல நாட்கள் விரைவில் வரும்” என்றார்.

மன்மோகன் சிங் சொன்ன இதையே மோடி அதற்கு மறுநாள் தன் தேர்தல் பிரச்சாரத்தில், “நேற்று பிரதமர் ஒரு நல்ல விஷயம் ஒன்றைக் கூறினார், விரைவில் அச்சே தின் பிறக்கும்” என்று தன் வெற்றியை அதற்கு உரித்தானதாக மாற்றினார் மோடி.

நரேந்திர மோடி பிரதமர் ஆனார், அச்சே தின் என்பது ஒரு கவர்ச்சி வாசகமானது, ஆனால் அது மன்மோகன் சிங் கூறியது.

அதே போல் திரிணாமூல் தன் பிரச்சாரத்தில் பெங்கால் தன் மகளையே ஆதரிக்கும் என்று கூறியதற்கு பதிலாக மிதுன் சக்ரவர்த்தியை அன்று பிரதமர் மோடி மேடையில் ‘பெங்காலின் மகன்’ என்று வர்ணித்தார்.

இப்படியாக மேற்கு வங்க தேர்தல் களம் பிரதமர் மோடிக்கும் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான பெரும் போட்டிக் களமாக மாறியுள்ளது.
Published by:Muthukumar
First published: