அடுத்த தவணையை அறிவிப்பதற்குள் ஆட்சியில் இருக்க மாட்டோம் என்பது ஓபிஎஸ், இபிஎஸ்-க்குத் தெரியும்- ப.சிதம்பரம் கடும் கிண்டல்

அடுத்த தவணையை அறிவிப்பதற்குள் ஆட்சியில் இருக்க மாட்டோம் என்பது ஓபிஎஸ், இபிஎஸ்-க்குத் தெரியும்- ப.சிதம்பரம் கடும் கிண்டல்

ப.சிதம்பரம்

அடுத்த தவணையை அறிவிப்பதற்கு தாங்கள் இருக்கமாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அரசுக்குத் தெரியும். அது ஒரு புறம் இருக்க, விவசாயக் கடன் ரத்து என்பதற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை தமிழ்நாடு அரசு பெற்றுவிட்டார்களா?

 • Share this:
  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.12 ஆயிரத்து 110 கோடி விவசாயக் கடன் ரத்து என்று அறிவிக்கிறார். 16 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று பெருமைப்படுகிறார், தாங்கள் ஆட்சிக்கு எப்படி இருந்தும் வரப்போவதில்லை என்று ஓபிஎஸ்க்கும் தெரியும் இபிஎஸ்க்கும் தெரியும் இருப்பினும் அள்ளி வீசுகிறார்கள் என்று காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  மேலும் அவர் விவசாயக்கடன்களை ரத்து செய்ய தமிழக அரசு ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை வாங்கி விட்டார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.

  இது தொடர்பாக ப.சிதம்பரம் தந்து சமூக வலைத்தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.12 ஆயிரத்து 110 கோடி விவசாயக் கடன் ரத்து என்று அறிவிக்கிறார். 16 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்று பெருமைப்படுகிறார். இந்த திட்டத்துக்கு துணை முதல்-அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கியிருக்கிறார் என்று சொல்லுவார்களா? பட்ஜெட்டில் ஒதுக்கியிருப்பது ரூ.5 ஆயிரம் கோடி மட்டுமே. அதை ஏன் வெளிப்படையாகச் சொல்லாமல் மறைக்கிறார்கள்? இது முதல் தவணையாம். அடுத்த தவணை எப்பொழுது?

  அடுத்த தவணையை அறிவிப்பதற்கு தாங்கள் இருக்கமாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அரசுக்குத் தெரியும். அது ஒரு புறம் இருக்க, விவசாயக் கடன் ரத்து என்பதற்கு ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை தமிழ்நாடு அரசு பெற்றுவிட்டார்களா? எப்பொழுது பெற்றார்கள்? இந்த கேள்விகளுக்கு முதல்-அமைச்சர் பதில் சொல்லவேண்டும் என்று தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.

  இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: