ADMK - PMK: அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ADMK - PMK: அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் வேறு எந்த கட்சிகள் இடம்பெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

  • Share this:
    அதிமுக கூட்டணியில் பாமக-விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

    தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிமுக, திமுக கட்சிகள் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்த உள்ளன.

    இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக-வுடன் தொகுதி பங்கீடு குறித்து இன்று ஆலோசனை நடைபெற்றது. இதில் பாமக-விற்கு அதிகம் ஆதரவு இருக்கும் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

    சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாமக தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து பாமக-விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். மேலும் அதிமுக கூட்டணியில் வேறு எந்த கட்சிகள் இடம்பெறும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    இதனிடையே அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக வன்னியர்கள் களப்பணியாற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள், அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என சொல்லும் அளவுக்கு, சட்டப்பேரவை தேர்தலில் ஒட்டுமொத்த வன்னியர்களின் களப்பணியும் அமைய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
    Published by:Vijay R
    First published: