கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ரூ.54 லட்சம் சொத்து, சென்னிதலா சொத்து ரூ.1.23 கோடி

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு ரூ.54 லட்சம் சொத்து, சென்னிதலா சொத்து ரூ.1.23 கோடி

பினராயி விஜயன்

காங்., மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி, புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், தன்னிடம், 3.41 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், 2.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளதாக, வேட்பு மனு தாக்கலில் கூறியுள்ளார்.

 • Share this:
  கேரள முதல்வர் பினராயி விஜயன், தனக்கு, 54 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு சொத்துக்கள் இருப்பதாக, தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ரமேஷ் சென்னிதலா தன்னிடம் ரூ.1.23 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

  கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 140 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்., 6ல், ஒரே கட்டமாக நடக்க உள்ளது.

  தர்மாதம் தொகுதியில் போட்டியிடும் பினராயி விஜயன், சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அதில், 51.95 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, இரு நிலங்கள், ஒரு வீடு ஆகிய அசையா சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்து உள்ளார்.

  வங்கி கணக்கில், 78 ஆயிரம் ரூபாய், மற்றும் 2.05 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். மொத்தமாக, 54 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.

  காங்., மூத்த தலைவர், ரமேஷ் சென்னிதாலா, ஹரிப்பட் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர், தன்னிடம், 1.23 கோடி ரூபாய் சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

  காங்., மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி, புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், தன்னிடம், 3.41 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்களும், 2.99 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் உள்ளதாக, வேட்பு மனு தாக்கலில் கூறியுள்ளார்.

  ரமேஷ் சென்னிதலா மனைவியின் பெயரில் ரூ. 2,20,77,033 மதிப்புள்ள சொத்துக்களும் அசையும் சொத்துக்கள் சுமார் ரூ.1,61,07,033 -ம் உள்ளது.

  140 தொகுதிகள் கொண்ட கேரள சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19. அதாவது நாளையுடன் முடிகிறது.  தேர்தல் முடிவுகள் மே 2ம்  தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  தேர்தல் ஆணைய இணையதளத்தில் 222 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகக் காட்டுகிறது. மார்ச் 12 முதல் 222 வேட்பாளர்கள் வேட்பு மனுத் தாக்கல் ச்செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: