அடிமை ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு நீட் ஒன்றே உதாரணம்! மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சர்வாதிகார ஆட்சி நடத்தினாலும் நீட்டை தமிழகத்திற்குள் வர அனுமதிக்கவில்லை.

அடிமை ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு நீட் ஒன்றே உதாரணம்! மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்
மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: October 16, 2019, 8:39 PM IST
  • Share this:
தமிழகத்தில் அடிமை ஆட்சி நடைபெறுகிறது என்பது நீட் தேர்வு ஒன்றே உதாரணம் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ‘நீங்கள் அடிமை ஆட்சி இல்லையென்றால் அதனை நான் வரவேற்கிறேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சர்வாதிகார ஆட்சி நடத்தினாலும் நீட்டை தமிழகத்திற்குள் வர அனுமதிக்கவில்லை. முன்னாள் முதல்வர்களாக ஜெயலலிதா, கருணாநிதி இருந்த போது வராத நீட் பிரச்சனை தற்போது தமிழகத்திற்கு வந்திருக்கிறது,

நீங்கள் அடிபணிந்து அடிமை ஆட்சி நடத்துகிறீர்கள் என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்” என முதல்வரை பார்த்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


மேலும் அவர் “எடப்பாடி பழனிச்சாமி மக்களால் தேர்ந்தெடுத்து முதல்வராக வந்தவரா இல்லை? ஜெயலலிதா, கருணாநிதி, அண்ணா என அனைவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி விபத்தினால் தான் முதல்வராக வந்துள்ளார்” என பரப்புரையில் பேசினார் ஸ்டாலின்.

பார்க்க :

பணப்பையில் ரூ.30 லட்சத்துக்கு பதிலாக காகிதங்களை வைத்து வாடிக்கையாளரை ஏமாற்றிய பைனான்சியர்!
First published: October 16, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading