கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அல்ல - பாமக தலைவர் ஜி.கே.மணி அதிரடி

Youtube Video

தேர்தல் நெருங்கும் நேரத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசு அறிவிப்பார் என்று ஜிகே மணி தெரிவித்தார்.

  • Share this:
எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் தானே தவிர, கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அல்ல என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.

மேலும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசு அறிவிப்பார் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் வேட்பாளர் யார் என்பதை பாஜக தலைமை அறிவிக்கும் என்று, பாஜக தரப்பில் தொடர்ந்து கருத்து தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், அதிமுக முதல்வர் வேட்ளர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவித்தது தேர்தல் பிரச்சாரத்திலும் அக்கட்சி ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், பாஜகவுடன் கூட்டணி தொடர்வதாகவும், எடப்பாடி பழனிசாமிமை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன்தான் கூட்டணி என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றது. இந்நிலையில், பாமக தலைவரின் அதிரடியான கருத்து தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றது.
Published by:Suresh V
First published: