முகப்பு /செய்தி /அரசியல் / குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது - காரைக்குடியில் முதல்வர் பேச்சு

குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது - காரைக்குடியில் முதல்வர் பேச்சு

காரைக்குடி பாஜக வேட்பாளர் எச்.ராஜா

காரைக்குடி பாஜக வேட்பாளர் எச்.ராஜா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காரைக்குடியில் பாஜக வேட்பாளராக எச்.ராஜா போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசியவர், “தி.மு.க., கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அ.தி.மு.க மக்களுக்கு சேவை செய்யும் கூட்டணி. தி.மு.க., ஆட்சியில் எந்த சாதனையும் செய்தது கிடையாது. அதனால்தான் சாதனையை சொல்வது இல்லை. மத்திய அரசு தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்ற ரூ.1 லட்சம் கோடி கொடுத்துள்ளது. மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் திட்டங்களை கொண்டு வர முடியும்.

தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி தேவை. கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதி தேவை, நிதியும் தேவை. தி.மு.க, அ.தி.முவை பார்த்து பா.ஜ.கவுக்கு அடிமை என்கிறது. ஆனால், தி.மு.க.தான் காங்கிரசுக்கு அடிமை. அதிகாரம் எங்கு இருக்கிறதோ அங்கு தி.மு.க மாறிவிடும். தி.மு.க நாட்டு மக்களை பார்க்கவில்லை. குடும்பத்தை மட்டும்தான் பார்க்கிறது. இந்த தேர்தல் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். மத்தியிலும், மாநிலத்திலும் வாரிசு அரசியல் வரக்கூடாது. கூட்டணி மாறினாலும் செய் நன்றி மறக்க கூடாது என நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பதன்று என திருக்குறளை சுருக்கி பேசினார். மேலும் தி.மு.க., கட்சி அல்ல அது ஒரு கம்பெனி அதில் பணம் போடுபவருக்கு சேர், சீட்டு கிடைக்கும்.

தற்போது செந்தில் பாலாஜி பணம் போட்டு ஷேர் வாங்கியுள்ளார். தி.மு.கவில் உள்ள பெரும்பாலோனோர் அ.தி.மு.க,வினர்தான். ராஜ கண்ணப்பன் பச்சோந்தி போன்று. கலர் மாறுவதை போல கட்சி மாறி களம் காண்பவர். அவரை கணக்கில் எடுப்பது கிடையாது. 2 ஆண்டுக்கு முன்பு ஸ்டாலின் எங்களுடைய குடும்பத்தில் யாரும் அரசியலுக்கு வருவது கிடையாது என்றார். தற்போது உதயநிதியை வேட்பாளராக அறிவித்துள்ளார். தி.மு.க.,வில் 20 பேர் வாரிசு வேட்பாளர்கள். அ.தி.மு.க., மக்களுக்கான கட்சி’ என்றார்.

செய்தியாளர்: முத்துராமலிங்கம்

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: BJP, DMK, Edappadi Palanisami, H.raja, Karaikudi Constituency, MKStalin, TN Assembly Election 2021