அன்று ஒரு எட்டப்பன்... இன்று ஒரு செந்தில்பாலாஜி - கரூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு

அன்று ஒரு எட்டப்பன்... இன்று ஒரு செந்தில்பாலாஜி - கரூரில் முதல்வர் பழனிசாமி பேச்சு

தேர்தல் பரப்புரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

செந்தில்பாலாஜி எத்தனையோ வேடம் போடுவார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கெட்டப்பில் வருவார். யாரும் ஏமாந்து விடாதீர்கள்.

  • Share this:
    கரூர் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜியை எட்டப்பன் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து உள்ளார். அ.தி.மு.கவில் மாவட்ட ரீதியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த செந்தில்பாலாஜி அ.தி.மு.க அரசில் போக்குவரத்துறை அமைச்சராகவும் இருந்தார். ஊழல் குற்றச்சாட்டு காரணமாக அவரிடம் இருந்த அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் டி.டி.வி.தினகரன் அணிக்கு திரும்பினார் செந்தில்பாலாஜி. அதன்பின் தி.மு.கவில் வந்து இணைந்தார். 2019-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் அரவக்குறிச்சியில் தி.மு.க வேட்பாளராக களமிறங்கிய செந்தில்பாலாஜி வெற்றியை தன்வசப்படுத்தினார்.

    2021 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க சார்பில் கரூர் தொகுதியில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை எதிர்த்து களமிறக்கப்பட்டுள்ளார் செந்தில்பாலாஜி. இந்நிலையில் கரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசியவர், “தி.மு.க என்பது குடும்பக் கட்சி. ஒரு கார்ப்பரேட் கம்பெனி . அந்த கார்ப்பரேட் கம்பெனியில யார் வேண்டுமானாலும் ஷேர் போடலாம். இப்ப செந்தில்பாலாஜி போய் ஷேர் போட்டிருக்கார். அ.தி.மு.கவை கவிழ்ப்பதற்காக செந்தில்பாலாஜி சென்றார். அன்று எட்டப்பன் இருந்தார் இன்றைக்கு செந்தில்பாலாஜி இருக்கார்.

    வீரப்பாண்டிய கட்டபொம்மனை காட்டிக்கொடுத்தவர் எட்டப்பன். இன்றைக்கு இந்த ஆட்சி கவிழ வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு சதி செய்த இந்த செந்தில்பாலாஜி. அவருடைய கனவு ஒருபோதும் நிறைவேறாது. தர்மம், நீதி வென்றதாக தான் சரித்திரம் உண்டு. அதர்மம் வென்றதாக சரித்திரம் இல்லை. செந்தில்பாலாஜி எத்தனையோ வேடம் போடுவார். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கெட்டப்பில் வருவார். யாரும் ஏமாந்து விடாதீர்கள்.

    செந்தில் பாலாஜி


    நம்முடைய வேட்பாளர் விஜயபாஸ்கர் ஒரு வெகுளி. ஒரு நல்ல மனிதர். 5 கட்சிக்கு மாறிய வேட்பாளர்தான் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி. அடுத்து எந்த கட்சிக்கு போவாருன்னு தெரியல. நம்முடைய வேட்பாளர் ஐ.எஸ்.ஐ முத்திரை மாதிரி. தி.மு.க வேட்பாளர் டூப்லிகேட். தயவுசெய்து கரூர் மக்கள் போலியை நம்பிவிடாதீர்கள்.

    அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்போது செந்தில்பாலாஜி எவ்வளவு பொய் பேசினார். நிலம் இல்லாத மக்களுக்கு 3 சென்ட் நிலம் கொடுக்கனும் அப்படின்னு சொன்னார். இப்ப அங்கிருந்து இங்க வந்துட்டாரு. அவர் சொன்ன வாக்குறுதி அப்படியே காற்றில் காணாமல் போய்விட்டது. அவரு மட்டுமல்ல அவரு தலைவர் மு.க.ஸ்டாலினும் அப்படியே சொல்றாரு. செந்தில் பாலாஜி நல்லவர், வல்லவர், திறமையானவர். செந்தில்பாலாஜி கொடுத்த வாக்குறுதிபடி 3 செண்ட் நிலம் தருவாருன்னு சொன்னார். எங்க மு.க.ஸ்டாலின் 3 செண்ட் நிலம் கொடுத்தீங்க. ஒரு செண்ட் நிலம் வாங்கி கொடுத்தீர்களா அல்லது அந்த தொகுதி மக்களைத் தான் சென்று சந்தித்தீர்களா. நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் அப்போதுதான் இந்த கரூர் தொகுதி வளர்ச்சியடையும்’ என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: