• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • Exclusive: ஆ.ராசா உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவில்லை - முதலமைச்சர் மனவேதனை

Exclusive: ஆ.ராசா உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவில்லை - முதலமைச்சர் மனவேதனை

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தாய் என்பது உயர்ந்த ஸ்தானம். ஏழை, பணக்காரன் என்று இல்லை. எல்லோருக்கும் அது ஒரு உயர்ந்த ஸ்தானம்.

  • Share this:
    தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் நியூஸ் 18 தமிழ் நடத்திய பிரத்யேக நேர்காணல்

    கேள்வி: தி.மு.க முக்கியத் தலைவர் ஆ.ராசா உங்களை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்திருந்தார். அதற்கு பகிரங்க மன்னிப்பும் கேட்டுள்ளார்.

    பதில்: இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. அவர் மத்திய அமைச்சராக இருந்தவர். திராவிட முன்னேற்ற கழகத்தில் துணை பொதுச்செயலாளர் என நான் கருதுகிறேன். இப்போதும் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவர் ஒரு வழக்கறிஞர். தெரிந்துதான் அதை அவர் பேசியிருக்கிறார். தெரியாமல் எல்லாம் பேசவில்லை. நாட்டு மக்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்ட காரணத்தினால் அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஆ.ராசா உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டதாக எனக்கு தெரியவில்லை.



    தாய் என்பது உயர்ந்த ஸ்தானம். ஏழை, பணக்காரன் என்று இல்லை. எல்லோருக்கும் அது ஒரு உயர்ந்த ஸ்தானம். அரசியல்வாதிக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் தாய் உயர்ந்த ஸ்தானம். தெய்வத்திற்கு சமமானது. அதை தரக்குறைவாக பேசுவது உண்மையிலே மனம் வேதனைப்படுகிறது. அப்படி பேசியவர்களை ஆண்டவன் நிச்சயமாக தண்டிப்பான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: