EXCLUSIVE : பெரியப்பா மு.க.அழகிரி களப்பணியாற்றி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் - உதயநிதி பதில்

உதயநிதி ஸ்டாலின்

ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி என்ற ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நல்லது.

  • Share this:
    தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினுடன் நியூஸ்18 தமிழ் நடத்திய பிரத்யேக நேர்காணல்.

    கேள்வி: தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எதிர்க்கட்சி என்ற ஒன்றே இருக்காது என்று சொல்லியிருக்கிறீர்களே

    பதில்: நான் அப்படி பேசியது கிடையாது. 234 தொகுதிகளில் கண்டிப்பாக 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என்று தான் பேசியிருக்கிறேன். எதிர்க்கட்சி எல்லாம் இருக்காது என நான் கூறவில்லை. ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி என்ற ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் நல்லது. யார் ஆளுங்கட்சியாக இருந்து தப்பி செய்தாலும் அதை எதிர்த்து கேள்விகேட்க ஜனநாயக ரீதியிலாக ஒரு எதிர்க்கட்சி இருக்க வேண்டும். மக்கள் 234 தொகுதிகளிலும் திமுகவை வெற்றிப்பெற வைத்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். அது மக்களின் விருப்பம். நான் எதிர்க்கட்சி ஒன்றே இருக்காது என எங்கேயும் சொன்னது கிடையாது.

    கேள்வி: இந்து விரோத கட்சி என ஒரு பேச்சு இந்ததேர்தலிலும் இருக்கிறது.

    ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவை அப்படி சொல்வார்கள். நாடாளுமன்றத் தேர்தலின் போது இந்த மாதிரியான குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். மக்கள் முடிவெடுப்பார்கள். தமிழக கோயில்களுக்கு பாதுகாப்பு கொடுத்து, குடமுழுக்கு நடத்தினோம். திருவாரூர் தேர் ஓடவைத்ததே கலைஞர்தான். எங்க வீட்டில் பிள்ளையார் சிலை இருக்கா அப்படிங்கிறது முக்கியம் கிடையாது. ஆனால் பிள்ளையார் சிலை இருக்கும் கருவறைக்குள் அனைத்து சாதியினரும் அனைத்து சமுதாயத்தினரும் உள்ளே செல்ல வேண்டும், என்பதுதான் தி.மு.க-வின் கொள்கை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதைத்தான் அண்ணா எங்களுக்கு கற்றுக்கொடுத்தார். எந்த மதத்துக்கும் தி.மு.க விரோதி கிடையாது.

     



    கேள்வி: இந்தத் தேர்தல் களத்துல உங்கள் பெரியப்பா மு.க.அழகிரி இருந்து களப்பணியாற்றி இருந்தால் நல்லாயிருக்கும் என நினைக்கிறீர்களா

    நன்றாக இருந்திருக்கும். அவ்ளோ பதில்.. அவர் களப்பணியாற்றியிருந்தால் கண்டிப்பாக நல்லாத்தான் இருந்திருக்கும்.
    Published by:Ramprasath H
    First published: