EXCLUSIVE : வெற்றி பெற்றால்.. அமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின் சிறப்பு பேட்டி

உதயநிதி ஸ்டாலின்

நிர்வாகிகளின் முடிவையடுத்து என்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட தலைவர் சம்மதித்தார். இது ஒன்றும் நியமன பதவி கிடையாது.

  • Share this:
    திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினுடன் நியூஸ்18 தமிழ் நடத்திய பிரத்யேக நேர்காணல்.

    கேள்வி: திமுக இளைஞரணி செயலாளர் என்ற பதவிக்கு உரிய உழைப்பையும் பங்களிப்பையும் அளித்துதான் வந்துள்ளீர்களா.

    பதில்: இல்லை.. நான் இன்னும் உழைத்திருக்க வேண்டும். உழைக்கவேண்டும் என்று தான் நினைத்தேன். பேராசிரியர் ஐயா, துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் இந்த பொறுப்பை ஏற்கும்படி கூறினர். நான் இரண்டு மூன்று மாதங்கள் தள்ளிவைத்தேன். நான் இன்னும் கட்சி வேளை செய்கிறேன் என்றேன். எனக்கு கொஞ்சம் சீக்கிரமாகத் தான் இந்தப் பொறுப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த பொறுப்புக்கு எந்த அளவுக்கு உழைக்கவேண்டுமோ அதை நான் செய்திருக்கிறேன் என்பது என்னுடைய எண்ணம். மாவட்ட செயலாளர்கள் தீர்மானம் நிறைவேற்றி தம்பிக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு கொடுத்தால் தான் இளைஞர்களை கட்சியில் சேர்க்க முடியும் என கூறியதால். தலைவர் வேறு வழியின்றிதான் இந்த பொறுப்பை எனக்கு அளித்தார்.

    கேள்வி: சேப்பாக்கம் தொகுதியில் நீங்கள் போட்டியிட விரும்பவில்லை என செய்திகள் வந்ததே?

    பதில்: ஆமாம், நான் விருப்பமனு தாக்கல் செய்தது உண்மை. அதன்பிறகு தான் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. தேர்தலுக்கு 25 நாள்கள்தான் அவகாசம் இருந்த போது நான் தலைவரிடம் சென்று பேசினேன். நான் சேப்பாக்கம் தொகுதி கேட்டது உண்மை. எனக்கு விருப்பம் இருக்கு. நீங்க முடிவெடுங்கள். எனக்கு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் வேட்பாளராக நிற்பதைவிட தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்யவே எனக்கு விருப்பம் அதிகம் என்றேன். தலைவரும் எனது கருத்தை கேட்டுவிட்டு நான் யோசித்து சொல்றேன் என்றார். சேப்பாக்கம் தொகுதி நிர்வாகிகள் நீங்கதான் இங்க நிற்கனும். நீங்கதான் எங்க வேட்பாளர் என்றனர். கொரோனா நிவாரணம் வழங்க தமிழகம் முழுவதும் சென்றேன். சென்னையிலும் நிறைய இடங்களுக்கு சென்றேன். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி என் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பதால் அங்கு அதிக முறை சென்றேன். நிர்வாகிகளின் முடிவையடுத்து என்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட தலைவர் சம்மதித்தார். இது ஒன்றும் நியமன பதவி கிடையாது. மக்களை சந்தித்து அவர்களின் நம்பிக்கையை பெற்று வாக்குகளை பெற்று வா என அனுப்பியுள்ளார்.



    கேள்வி: ஸ்டாலினுக்கு அடுத்து திமுக தலைவராக உருவெடுப்பதாக பேசப்படுகிறதே

    பதில்: நான் இன்னும் ஒரு தடவை கூட சட்டமன்ற உறுப்பினர் ஆகவில்லை. அதற்குள் இப்படியான கேள்விகளை கேட்டால் நான் என்ன செய்வது.

    கேள்வி: துணை முதல்வர் பதவி என்று பேசப்படுகிறதே

    பதில்: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியை ஒரு முன்மாதிரி தொகுதியாக ஆக்குவேன் என அங்கிருக்கும் மக்களுக்கு வாக்குறுதி கொடுத்துள்ளேன். அமைச்சர் பதவி எல்லாம் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அதெல்லாம் தலைவர் முடிவு செய்ய வேண்டியது. நான் போய் எனக்கு அமைச்சர் பதவி கொடுங்கன்னு கேட்கவா முடியும்." என்றார்.
    Published by:Ramprasath H
    First published: