• HOME
  • »
  • NEWS
  • »
  • politics
  • »
  • சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி திருத்தணி கோயிலின் 365 படிக்கட்டுகளில் முட்டிப் போட்டு ஏறிய திமுக தொண்டர்கள்

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டி திருத்தணி கோயிலின் 365 படிக்கட்டுகளில் முட்டிப் போட்டு ஏறிய திமுக தொண்டர்கள்

திருத்தணி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வெற்றி பெற திமுகவினர் 20 பேர் திருத்தணி முருகன் கோயில் அடிவாரத்திலிருந்து 365 படிக்கட்டுகளில் முட்டி போட்டு ஏறி வெற்றி பெற வேண்டிக் கொண்டனர்.

  • Share this:
    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக இந்த தொகுதியில் களம் காண்கிறது.  திருத்தணி தொகுதியில் 3 முறை நகர் மன்றத் தலைவராக இருந்த சந்திரன் என்பவர் போட்டியிடுகிறார். வேட்பாளர் சந்திரன் தொடரந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் திருத்தணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சந்திரன் வெற்றி பெற வலியுறுத்தி ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருடத்தின் மொத்த நாட்களான 365 நாட்களை குறிக்கும் வகையில் அடிவாரத்திலிருந்து மலை வரை உள்ள 365 படிக்கட்டிகளிலும் பாலாபுரம்  திமுக கிளை செயலாளர் சந்திரசேகர் மற்றும் திமுக தொண்டர்கள் 20 பேர் முட்டி போட்டு படிக்கட்டில் ஏறி வேண்டிக் கொண்டனர்.

    தொடர்ந்து அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே இந்த தொகுதியை தக்க வைத்து வந்த நிலையில் இந்த முறை திமுக நேரடியாக களம் காண்பதால் திமுக மற்றும் அதிமுகவினரிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில் வேண்டிய வரம் தரும் முருகன் கோயிலில் திமுக தொண்டர்கள் முட்டி போட்டி படியேறியதால் திமுக வேட்பாளர் சந்திரன் வெற்றி பெறுவது நிச்சயம் என திமுக வினர் தெரிவித்தனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: