‘இந்த ரெய்டுக்கு எல்லாம் தி.மு.க துவண்டுவிடாது’- துரைமுருகன் ஆவேசம்

‘இந்த ரெய்டுக்கு எல்லாம் தி.மு.க துவண்டுவிடாது’- துரைமுருகன் ஆவேசம்

துரைமுருகன்

வேலுவுக்கு சொந்தமான கெஸ்ட் அவுஸில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கி உள்ளார். அங்கு சோதனை நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது.

 • Share this:
  திருவண்ணாமலை தி.மு.க வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வரிமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள எ.வ.வேலு இல்லம் திருவண்ணாமலை, கரூர் பகுதியில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடக்கிறது. இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சென்னை கோட்டூர்புரத்திலுள்ள தனது இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

  எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடக்கும் சோதனை குறித்து பேசியவர், “எ.வ. வேலு வீடு மற்றும் சொந்தமான இடங்களில் சோதனை நடக்கிறது. சோதனை நடத்த உரிமையுண்டு. தேர்தல் நேரத்தில் நடத்தப்பட்டுள்ள சோதனையை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக தி.மு.க கருதுகிறது.

  வேலுவுக்கு சொந்தமான கெஸ்ட் அவுஸில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கி உள்ளார். அங்கு சோதனை நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது. அங்கு எந்த பொருளும் இல்லை. ஆனால் விலைமதிப்பற்ற ஒரு பொருள் இருந்தது. அதுதான் மு.க.ஸ்டாலின். அவரை வேண்டுமானால் சோதனையில் கைப்பற்றலாம். எதிர்கட்சித் தலைவர் 2 மாதத்துக்கு பிறகு முதல்வராகப் போகிறார். ஒரு பெரிய தலைவர் அவர்.

  தோல்வி பயத்தில் அ.தி.மு.கவினர் பா.ஜ.கவை தூண்டிவிட்டு மத்திய அரசு சோதனை நடத்தியுள்ளது. இதனால் தி.மு.கவினர் யாரும் துவண்டு விடமாட்டார்கள். தி.மு.கவினர் உற்சாகத்தோடு பணியாற்றுவார்கள். தி.மு.கவை தேர்தல் களத்தில் வெல்ல முடியாது என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இது நாகரீகமானது அல்ல. எங்களது கண்டனத்தை பதிவு செய்கிறோம்” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: