ஸ்டாலின் ரத்தம் சிந்தியதெல்லாம் வீர வரலாறுகள், இதெல்லாம் யாருக்கும் தெரியாது: டி.ஆர்.பாலு பேச்சு

ஸ்டாலின் ரத்தம் சிந்தியதெல்லாம் வீர வரலாறுகள், இதெல்லாம் யாருக்கும் தெரியாது: டி.ஆர்.பாலு பேச்சு

டி.ஆர்.பாலு.

திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்காகப் போராடி சிறை சென்று சித்ரவதையை அனுபவித்தவர் என்று திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

  • Share this:
    திமுக தலைவர் ஸ்டாலின் மக்களுக்காகப் போராடி சிறை சென்று சித்ரவதையை அனுபவித்தவர் என்று திமுக எம்.பி., டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

    சென்னை அம்பத்தூரில் டி.ஆர்.பாலு பேசியதாவது:

    நாங்களெல்லாம் ஒரு காலத்தில்... கழகத்தினுடைய தலைவராக அவர் வருவார் கழகத்தின் பொருளாளராக நான் வருவேன் என்றெல்லாம் பார்க்காத நேரம். இப்படி தொடர்ந்து எதையும் எதிர்பார்க்காமல் சிறை, சித்தரவதைகள் அனைத்தையும் இருவருமே அனுபவித்திருக்கிறோம்.

    ஏறத்தாழ 25 முறை சிறை ஸ்டாலின் சிறை சென்று மக்களுக்காக ஆற்றிய போராட்டங்கள், அந்தப் போராட்டங்களில் கைது செய்யப்பட்டு சிறையில் ஒருவாரம் இருந்திருக்கிறார், 15 நாட்கள் இருந்திருக்கிறார். ஒரு மாதம் இருந்திருக்கிறார் 3 மாதம் இருந்திருக்கிறார், ஒரு வருடம் கூட நானும் அவரும் சென்னை சிறையில் இருந்திருக்கிறோம்.

    அவர் ரத்தம் சிந்தியதெல்லாம் வீர வரலாறுகள் பலபேருக்குத் தெரியாது, யாருக்கும் தெரியாது.

    டி.ஆர்.பாலு இவ்வாறாகப் பேச தர்மபுரியில் அன்று திமுக சார்பில் நடந்த சைக்கிள் பிரச்சார பேரணி தொடக்க நிகழ்ச்சியின் போது எம்எல்ஏ-வும், எம்.பி-யும் கட்சியினருடன் இணைந்து டான்ஸ் ஆடிய காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலானது.

    அதில் ‘ஸ்டாலின் தான் வர்றாரு, நல்லாட்சி தர போறாரு, ஸ்டாலின்தான் வர்றாரு விடியலை தர போறாரு' என்ற வரிகளுடன் பிரசார பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரசார பாடலை ஒலி-ஒளி காட்சியாக பொதுமக்களிடையே வெளிப்படுத்தும் வகையில் தி.மு.க.வினர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக தர்மபுரி அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் அவ்வை கோட்டம் முன்பு தி.மு.க. பிரசார பாடல் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மத்தியில் டாக்டர் செந்தில்குமார் எம்.பி., கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி எம்.எல்.ஏ. ஆகியோர் அந்த பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
    Published by:Muthukumar
    First published:

    சிறந்த கதைகள்