திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அண்ணா அறிவாலயம்

திமுக-வும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையை நேற்று தொடங்கியது.

 • Share this:
  திமுக கூட்டணியில் இருக்கும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதால் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை முடுக்கிவிட்டுள்ளன. அதிமுக கட்சி பாமக-வுடன் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ள நிலையில் பாஜக மற்றும் தேமுதிக கட்சிகளுடன் தொகுதி ஒதுக்கீடுவதில் இழுபறி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

  இந்நிலையில் திமுக-வும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தையை நேற்று தொடங்கியது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. நேற்று பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்த நிலையில் இன்று இரண்டு கட்சிகளுக்கு எத்தனை தொகுதி ஒதுக்கப்பட்டது என்று இன்று அறிவிக்கப்பட்டது.  இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

  இதை தொடர்ந்து மதிமுக மற்றும் விசிக கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. மதிமுக கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
  Published by:Vijay R
  First published: