முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுகவில் உறுப்பினர் அட்டை - குளறுபடியான ஆன்லைன் சேர்க்கை

முறைப்படுத்தாத இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையால், பிரபலங்களுக்கு சிக்கல் ஏற்படுத்தவோ, குழப்பத்தை ஏற்படுத்தவோ வழி வகுக்கும் முடியும்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுகவில் உறுப்பினர் அட்டை - குளறுபடியான ஆன்லைன் சேர்க்கை
முதலமைச்சர் பழனிசாமி பெயரில் திமுக உறுப்பினர் அட்டை
  • News18 Tamil
  • Last Updated: September 23, 2020, 6:24 PM IST
  • Share this:
திமுகவின் ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில், மொபைல் எண் ஓடிபி மூலம் யாரை வேண்டுமானாலும் உறுப்பினராக்கலாம் என்ற சர்ச்சை எழுந்துள்ளது. திமுகவில் "எல்லோரும் நம்முடன்" என்ற திட்டத்தின் மூலம், இணையதளம் வாயிலாக ( ஆன்லைன்) உறுப்பினர் சேர்க்கையை கடந்த 15ம் தேதி முப்பெரும் விழா அன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலத்தில் தொடங்கி வைத்தார்.

மிகப்பெரிய கட்சியான திமுகவில் உறுப்பினர் ஆவது மிகவும் எளிமைப்படுத்தப்பட்டதால், பெரும்பாலானவர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போது சர்ச்சையும் சேர்ந்து வந்திருக்கிறது..

குறிப்பாக துவங்கிய எட்டு நாட்களிலேயே 2 லட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேல் உறுப்பினர்கள் இதன் மூலம் சேர்ந்ததாக திமுக தலைமை அறிவித்துள்ள நிலையில் எந்தவித ஆவணமும் இன்றி, உறுப்பினர் சேர்க்கை சாத்தியம் என்பது தற்போது சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.


ஆன்லைன் மூலம் உறுப்பினர் சேர்க்கைக்காக, விண்ணப்பிக்க கூடியவர்கள், தங்களது மொபைல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி.,யை பதிவு செய்து உறுப்பினர் அட்டையை பெற முடிகிறது.
குறிப்பாக பெயர், புகைப்படம், மெயில் முகவரி உள்ளிட்ட பல விபரங்களை மாற்றிக் கொடுத்தாலும் உறுப்பினர் அட்டை பெற முடிகிறது என்பது திமுகவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

இதன் மூலம் உயிரோடு இல்லாதவர்களுக்கும், வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கும், மாற்று கட்சி முக்கிய பிரமுகர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும் அவர்களின் சம்மதம் இல்லாமலும் அவர்களுக்கு தெரியாமலே, திமுகவில் உறுப்பினர் அட்டையை பெற முடியும்.இப்படியான குளறுபடிகள் இருப்பது தற்போது சமூக வலைதளங்களில் பரவும் உறுப்பினர் அட்டைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது முதலமைச்சர் பழனிசாமி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோருக்கு திமுகவில் உறுப்பினர் சேர்க்கை நடந்துள்ளது.

முறைப்படுத்தாத இந்த ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையால், பிரபலங்களுக்கு சிக்கல் ஏற்படுத்தவோ, குழப்பத்தை ஏற்படுத்தவோ வழி வகுக்கும் முடியும்.

இந்த புதிய வசதியை செயல்படுத்துவது மட்டுமே தங்களது பணி எனவும், விண்ணப்பிக்கும் விதிமுறைகளை வகுத்தது வேறொரு பிரிவினர் என கூறுகின்றனர், திமுக தகவல் தொழில் நுட்ப அணியினர். மேலும் ஆன்லைன் மூலம் சேர்ந்த உறுப்பினரை, நிரந்தர உறுப்பினராக்குவதற்கு முன், இவையெல்லாம் சரி செய்வோம் என்கின்றனர் பெயர் சொல்ல விரும்பாத நிர்வாகிகள் சிலர்.

ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள்.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading