DMK MP SHOW HIS THANKS YOGI ADITYANATH FOR TAMILNADU VISIT SRS
யோகி ஆதித்யநாத் வருகைக்கு நன்றி தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர்!
யோகி ஆதித்யநாத்
தனக்காக பிரசாரம் மேற்கொண்டவர்களுக்கு வானதி சீனிவாசன், சமூக வலைதளங்கள் மூலம் நன்றி தெரிவித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக டிவிட்டரில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு தனது நன்றியினை வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
கோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள வந்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு பா.ஜ.க மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் டிவிட்டரில் நன்றி தெரிவித்த நிலையில், நாங்களும் உ.பி.முதல்வருக்கு நன்றி தெரிவிக்கின்றோம் என தர்மபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில் குமார் டிவிட்டரில் பதிவிட்டு கேலி செய்துள்ளார்.
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் போட்டியிட்டனர். இந்நிலையில் வானதி சீனிவாசனுக்கு பிரச்சாரம் மேற்கொள்ள உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்தில் இருந்து அவருடன் ஏராளமான பா.ஜ.க, இந்து முன்னணி தொண்டர்கள் ஊர்வலமாக சென்றனர். ராஜவீதியில் இரு சக்கர வாகன பேரணி நிறைவடைந்த நிலையில் , அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் மேற்கொண்டார்.
யோகி ஆதி்த்யநாத் வருகையின் போது நடத்தப்பட்ட இரு சக்கர வாகனப் பேரணியின் போது டவுன்ஹால் பகுதியில் இஸ்லாமியர்களுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த செருப்பு கடைகளின் மீது இரு சக்கர வாகன பேரணியில் வந்தவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். கல்வீச்சு தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கல்வீச்சுக்குள்ளான செருப்பு கடைக்கு அடுத்தடுத்து அரசியல் கட்சியினர் சென்று ஆறுதல் தெரிவித்தனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் என பலரும் அந்த கல் வீச்சு தாக்குதலுக்குள்ளான செருப்பு கடைக்குச் சென்று வந்தனர்.
பாஜக தரப்பில் இருந்து யாரும் செல்லாத நிலையில், கூட்டணிக் கட்சியான அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அந்த தொகுதியின் தற்போதைய அதிமுக எம்எல்ஏவான அம்மன் அர்ஜுனன் ஆகியோர் சென்று அவர்களுக்கு நம்பிக்கையளித்தனர். இந்நிலையில் அந்த வீடியோ காட்சியின் உண்மை தன்மையை சோதிக்க வேண்டும் எனவும், சிறு சம்பவம் ஊதி பெரிதாக்கப்படுகின்றது எனவும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்து இருந்தார். அதே வேளையில் இந்த கல்வீச்சு சம்பவம் அந்த பகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு பெரிய பின்னடைவாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வந்தனர்.
தற்போது சட்டமன்றத் தேர்தல் வாக்குபதிவு நடைபெற்று முடிந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்று கணிக்க முடியாத நிலை இருக்கின்றது. வானதி சீனிவாசனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருத்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனை "லிப் சர்வீஸ் செய்பவர்" என தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததும், உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் வருகையின்போது ஏற்பட்ட கல்வீச்சு சம்பவமுமே வானதி சீனிவாசனுக்கு பின்னடைவை ஏற்படுத்தி இந்த தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்று கணிக்க முடியாத நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.
I thank Hon'ble UP CM
Sh. @myogiadityanath for the support and for campaigning in Coimbatore South.
தனக்காக பிரசாரம் மேற்கொண்டவர்களுக்கு வானதி சீனிவாசன், சமூக வலைதளங்கள் மூலம் நன்றி தெரிவித்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக ட்விட்டரில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு தனது நன்றியினை வானதி சீனிவாசன் தெரிவித்திருந்தார்.
உங்களுடன் சேர்ந்து நாங்களும் அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.😊🙏 https://t.co/RmHoMDGz2a
இந்நிலையில் அந்த ட்விட்டர் பதிவுக்கு நாங்களும் அவருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்வதாக திமுகவைச் சேர்ந்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செந்தில்குமார் பதிவிட்டு வானதி சீனிவாசனை கலாய்த்துள்ளார்.