கொரோனா கவச உடை அணிந்து ஜனநாயக கடமையாற்றிய கனிமொழி

கனிமொழி

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கொரோனா பாதுகாப்பு உடையணிந்து தனது வாக்கினை செலுத்தினார்.

 • Share this:
  சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தி.மு.க மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். தனியார் மருத்துவமனையில் கனிமொழி சிகிச்சை பெற்று வருகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இன்று மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

  இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வீசுவதால் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் நடக்கும் நேரத்தில் கடைசி ஒரு மணி நேரம் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிஇ கிட் அணிந்து வாக்கு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில் தி.மு.க எம்.பி கனிமொழி சென்னை ஆர்.கே சாலையில் உள்ள வாக்குச் சாவடியில் கொரோனா கவச உடையணிந்து வாக்களித்தார். கொரோனா நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பணியாளர்களும் கவச உடை அணிந்திருந்தனர். கொரோனா காலம் என்பதால் வாக்குச்சாவடியில் பொதுமக்களுக்கு சானிடைசர், க்ளவுஸ், முகக்கவசம் ஆகியவை விநியோகிக்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: