யார் மீது புகார் கூற வந்தோமோ அவர்களை வைத்துக் கொண்டே குறைகளை கேட்டால் எப்படி? புலம்பும் திமுக நிர்வாகிகள்

சென்னை அண்ணா அறிவாலயத்தில்  மண்டல வாரியாக திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

யார் மீது புகார் கூற வந்தோமோ அவர்களை வைத்துக் கொண்டே குறைகளை கேட்டால் எப்படி? புலம்பும் திமுக நிர்வாகிகள்
அண்ணா அறிவாலயம்
  • Share this:
சென்னை அண்ணா அறிவாலயத்தில்  மண்டல வாரியாக திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக , சட்டமன்ற தேர்தல் பணிகள், உட்கட்சி பூசல், கட்சி நிர்வாகிகள் செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஒன்றிய, நகர , பேரூர் கழக செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர் பாலு, முதன்மை செயலாளர் கே.என் நேரு, துணைபொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஆ.ராசா , அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி உள்ளிட்டோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்து  நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

மேலும் கட்சி நிர்வாகிகளுடன் அந்தந்த மாவட்ட செயலாளர்களுடன் உடன் சென்று இருந்தனர். இந்த ஆலோசனையில் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள், உட்கட்சி பூசல் குறித்த தகவல்களை ஸ்டாலின் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். அதில் பெரும்பாலான நிர்வாகிகள் மூத்த நிர்வாகிகள் குறித்தும், மாவட்ட செயலாளர்கள் செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக புகார் கூறவில்லையாம்.


யார் மீது  புகார் கூற வந்தமோ அவர்களை வைத்து கொண்டு அவர்களை பற்றி குறைகளை கேட்டால் , எப்படி வெளிப்படையாக கூறுவது என ஆலோசனைக்கு பின் திமுக நிர்வாகிகள் பலர் புலம்பி வருகின்றனர்.கொரோனா குறித்த தகவல்கள்
First published: October 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading